தமிழகத்தில் அம்மா போய் சின்னம்மா வந்தாகிவிட்டது.
முகமாற்றம் மட்டுமல்ல !
அ தி மு க வின் தலைமைப் பதவி சின்னம்மாவிற்குத் தங்கத் தாம்பாளத்தில் தந்தாகிவிட்டது.
ஓ பன்னீர்செல்வத்தை எப்போது எப்படி போகச் சொல்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிச்சன் கேபினெட்டை மக்கள் கேபினெட்டாக மாற்ற நினைக்கிறார்கள்.
பின்னணி பாடியவர் திரைக்கு முன்னால் வர விரும்புவது புரிகிறது.
அது வரும்வரைக்கும் தமிழகத்தின் சாதாரணக் குடிமகனுக்கு இது ஏட்டுச் சுரைக்காய்தான், அகடமிக் இன்டிரஸ்ட் தான்.
எப்போது சின்னம்மா அரசுக் கட்டிலில் அமர்கிறார்களோ அப்போதிலிருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தராசுத் தட்டில் வைக்கப்படும்.
அவரது நேற்றைய மற்றும் இன்றைய செயல்பாடுகளை முழுச் சுதந்திரத்தோடு விமரிசிப்பது மட்டுமல்லாமல் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமரிசிக்க நேரக்கூடும்.
எதிர்க்கட்சிகளும் வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்.
தமிழகத்தில் அப்போது உண்மையான ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அப்போது சொல்லுவோமா ‘பலே வெள்ளையம்மா !’
happy newyear celeberate with happy kuvikam jan 2017. excellent…thanks a lot d.rajendran, papanasam
LikeLike