நிஜ மாயை – ( Augmented Reality) –
(குவிகத்தில நாம வைச்ச பேர் தான் !)
(Image copyright ALIBABA)
சீனாவில் பிரபலமான அலிபாபா நிறுவனம் ஒரு மாயக் கண்ணாடியைக் கொண்டு வந்திருக்கிறது. இதைப் போட்டுக்கொண்டு பார்த்தால் மால்களில் – கடையில் இருக்கும் பொருட்கள் அப்படியே தத்ரூபமாக நம் கண்களில் தெரியும் – விலை மற்றும் அவற்றின் குறிப்புகள் உட்பட.
அப்படியே உங்கள் கண்ணை அசைத்து எது வேண்டுமோ அதை ஆர்டர் செய்யலாம்.
இந்த மாயக் கண்ணாடியை விலை கொடுத்து வாங்கலாம். அல்லது ஒரு அட்டையை உங்கள் கைபேசியில் இணைத்துக் கொண்டால் அதன் மூலம் பொருட்களைக் கடையிலிருந்து நேரடியாக வாங்கலாம்.
நம்ம ப்ளிப் கார்ட், அமேசான் போன்றவைகளை இது ஓரம் கட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போகிமேன் விளையாட்டும் இந்த நிஜமாயையை வைத்து உருவாக்கப்பட்டதுதான்.
சபாஷ் சரியான போட்டி !