ஆனந்த் குடியிருப்புப் புத்தாண்டுக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை!
புயலே .. அற்பப் பயலே ..
உனக்கென்ன போதை தலைக்கேறியதோ ..
அதனால் பாதை தான் மாறியதோ ..
நீ மரங்களைச் சாய்த்தாய் .. மனங்களை அல்ல..
நீ கம்பங்களைச்சாய்த்தாய் .. மன உறுதியை அல்ல ..
ஒரு வகையில் உனக்கு நன்றி .. ஆம் ..
ஒரு வகையில் உனக்கு நன்றி ..
நான்கு சுவருக்குள் ஒளிந்தவர்க்கு .. வானைக் காட்டினாய்..
நான் எனது என்று வாழ்ந்தவர்க்கு .. சமத்துவம் காட்டினாய் ..
சுனாமியைக் கடந்தவர்கள் நாங்கள் ..
சுனாமியின் பினாமியே .. உன்னையா கடக்க முடியாது?
நீ.. எம்மைப் புரட்டிப் போட்டாலும் சரி ..
இல்லை எம்மை மிரட்டிப் பார்த்தாலும் சரி ..
அந்த.. ‘நாடா’வானாலும் சரி …
வந்த .. ‘வார்தா’ வானாலும் சரி…
மனிதன் உள்ளவரை .. அவனுள் ..
மனிதம் உள்ளவரை ..
எந்தப் புயலும் கடந்து போகும் ..
இந்தப் புவியும் எழுந்து ஓடும்..
மீண்டும்… மீண்டும் ..