இலக்கிய சிந்தனையின் 563 வது , இலக்கிய வாசலின் 23 வது நிகழ்ச்சிகள் -அறிவிப்பு

 

இலக்கிய சிந்தனையின் 563 வது நிகழ்வாக,   

கவிதா பதிப்பகத்தின் உரிமையாளர்   திரு சேது சொக்கலிங்கம் அவர்களின் ” ஒரு பதிப்பாளரின் அனுபவங்கள் ”  என்ற உரை      நடைபெறும். 

==========================================================

இடம் :

ஸ்ரீனிவாச காந்தி நிலையம், (Gandhi Peace Foundation)    அம்புஜம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை, சென்னை 600018

==========================================================

நாள்: 

25 -.02 -2017   சனிக்கிழமை  , மாலை 6.00 மணி    

==========================================================

அத்துடன் , இலக்கிய வாசலின் 23வது  நிகழ்வாக மாலை  7.00 மணிக்கு அதே இடத்தில் 

ஆடிட்டர் ஜெயராமன் ரகுநாதன்  “சிறுகதைகள் அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் பேசுவார்.

 

அனைவரும் வருக! 

இலக்கிய சிந்தனையும் குவிகம் இலக்கிய வாசலும் இணைந்து நடத்திய நிகழ்வு

இலக்கிய சிந்தனையின் சார்பில் (562 வது நிகழ்வு ) 28 ஜனவரி சனிக்கிழமை மாலை  குவிகம் இதழின் ஆசிரியர் சுந்தரராஜன்  தாம் எழுதிய “ஸ்ரீமந்நாராயணீயாம்ருதம் ” என்ற நூலின் ஆதாரத்தில் நாராயணீயத்தின் சிறப்புக்களைப் பற்றிப் பேசினார்.

முகநூலில் நண்பர்கள் எழுதிய பாராட்டுதல்களிலிருந்து அந்த நிகழ்வு பலருக்குப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது.

பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு நன்றி! 

அதைத் தொடர்ந்து குவிகம் இலக்கியவாசலின் (22 வது நிகழ்வு) லா ச ரா வின் அபிதா  – வாசகர் பார்வையில்” என்ற  கலந்துரையாடல் நடைபெற்றது. 

லா ச ராவின்  புதல்வர் ஸப்தரிஷி அவர்களின் தலைமையில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் , சொல்லாடல்கள் அந்த நாவலில் திளைத்தவர்களை திக்கு முக்காடச் செய்தன . கிருஷ்ணமூர்த்தி, அழகியசிங்கர், தேவகோட்டை மூர்த்தி ஆகியோர் அபிதாவின் சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போனதில் நேரம் சென்றது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிகழ்வு அபிதாவைப்  படிக்காதவர்களை எப்படியாவது  படித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டச் செய்ததில் முடிந்தது.

 

 

 

 

img_8116 img_8164 img_8166

img_8170 img_8174img_8172


img_8171img_8168

சிற்றிதழ்கள்

வாட்ஸ் அப் ஜோக்

 

pic1

ஒரு கணவன் தன் மனைவியிடம் காலையில் எழுந்ததும் அவளைப் பார்த்து ” இன்று மிக நல்ல நாள்’ என்றான்.

மனைவிக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆயிற்று இவனுக்கு ? என்று நினைத்துக் கொண்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள்.

அடுத்த நாள் காலையிலும் அவளைப் பார்த்ததும் ” இன்று மிக நல்ல நாள்’ என்றான். அவளும் , ஏதோ .லூஸ்  மாதிரி பேசுகிறான் என்று கண்டு கொள்ளாமல் போய் விட்டாள்.

இப்படியே நாலைந்து நாட்கள் நடந்து கொண்டிருந்தது. அவளுக்குப் பொறுமை எல்லை மீறியது. ” ஏன் இப்படி தினமும் இன்றைக்கு நல்ல நாள், இன்றைக்கு நல்ல நாள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்? என்று கத்தினாள்.

கணவன் மெல்லக் காரணத்தைச்  சொன்னான். ” போன வாரம் நாம சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது நீ சொன்னது ஞாபகம் இருக்கா? ஒரு நல்ல நாள் பார்த்து நான் உங்களை விட்டுட்டுப் போயிடுவேன் ‘ என்று சொன்னாயே!  அதனால தான் தினமும் உனக்கு ஞாபகப் படுத்தினேன். இன்னிக்கு நல்ல நாள் என்று”

இது எப்படி இருக்கு?

Related image

ராவேசு கவிதைகள்

நட்பென்ற கானல்

மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்

நான் முழுதாய் நம்பி
பலருடன் பழகினேன்
நட்பை
கத்திக்  கொன்றார்கள்
குத்திக்கொன்றார்கள்
பகட்டும் பாசாங்கும்
தெளிம்பித்  தெளிம்பி
கண்ணை மறைத்தது
ஏமாந்தபோதும் ஏக்கம்தான் ….

என்றேனுமொருநாள் மாறுமின்னிலை
காத்ததும் பயனில்லை
நண்பன் ரூபத்தில்
நடமிடும் நல்லவரை

மன்னிக்க வேண்டும்
அதனை கற்க வேண்டும்
தினசரி வாழ்க்கை

Image result for lovers' fight in tamilnadu paitings

விடிந்தது காலை
கோபத்தில் இல்லாள்
தேக்கிவைத்த காதலை
சொல்ல யத்தனிக்கை……

மறுத்தது வார்த்தை
கவிதையை வடித்தேன்….
மாலை உடன்பாடு எட்டும்

ஆனால்

வார்த்தை தடித்தது
பேச்சும் தடித்தது

சண்டையின் போது
வார்த்தை
சிதைந்து வரும்
கோபம்
கிளர்ந்து எழும்
அந்நேரம் காலைக்காதல்
மனதில் நில்லாது
களத்தில் செல்லாது

அதை எழுதிய
பின்னாளில்
இதுக்கா அழுதோமென
சிரித்துக் கொண்டிருக்கலாம்

Image result for fight between husband and wife in tamilnadu

 

 

காதலர் தினம் – எஸ் எஸ்

 

 

கோக்கும் பெப்ஸியும் வேண்டவே வேண்டாம் – அது சரி
வேலன்டைன் தினத்தை என்ன செய்வது ? ம்..ம் யோசிப்போம்
வேலன்டைன் தினம் காதலர் தினம்
வீரமும் காதலும் தமிழரின் பாரம்பரியம்
அதனால் காதலர் தினத்துக்குப் பச்சைக் கொடி காட்டுவோம்
சில முன்னணிப் பெரிசுகள் தடுத்தாலும் சரி
நமக்குத் தேவை காதலர் தினம்
இதுவும் ஒரு ஜல்லிக்கட்டு தானே
இதிலும் உண்டே ஏறு தழுவுதல்!

காளையை அடக்குவது ஜல்லிக்கட்டு
அது தானே நடக்கிறது காதலர் தினத்திலும் !
கொஞ்சம் கற்பனைக் காரில் பறந்து செல்வோமா?
கனவு இருட்டைத்  தொடர்ந்து செல்வோமா?

வாடி வாசலில் வருவது மாடல்ல நம் காதலன்
என்ன திமிர் ! என்ன கொழுப்பு ! என்ன வேகம் !
எத்தனைப் பெண்கள் அவனை அடக்க வருகிறார்கள் !
அவனைத் துரத்திக் கொண்டு ஒருத்தி வருகிறாள்!
அவன் மீது பாய்ந்து அவன் தோளைப் பிடிக்கிறாள்!
அவன் கழுத்தைக் கட்டித் தழுவிக் கொள்கிறாள்!
அவன் கரத்தைப் பற்றி இழுக்கிறாள்!
அவனுடன் ஏழடி  ஓடி ஓடி வருகிறாள் !
அவனைத் தன் மார்புடன் இறுக்கிக் கொள்கிறாள்!
ஏறு தழுவி அவனை வீழ்த்துகிறாள் !

திமிருடன் வந்தவன் திண்டாடுகிறான் !
கிழிக்க  வந்தவன் வெத்து வேட்டாகிறான்
திமிறிப் பார்த்தவன் திணறிப் போகிறான்!                                                           துள்ளி வந்தவன் வெட்கி நிற்கிறான்

வெற்றிப் பெருமிதம் அவள் நெஞ்சினில்
வென்றவளுக்குப் பரிசு வேண்டாமா?
தோற்றவன் தருகிறான் !
மஞ்சள் தடவிய மூக்கணாங்கயிறு!                                                                               வாடி வாசல்  ! வாடிய வாசல் !

கண் விழித்துப் பார்த்தால்
கனவல்ல நிஜம்!!

 

கதை சொல்லு கதை சொல்லு

 

‘உலக கதை சொல்லும் திருவிழா 2017’ சென்னையில் இந்த மாதம் நடை பெற்றது.

இந்த வருடத்தின் தலைப்புக்கள்:

வெவ்வேறு நாடுகளின் கதைகளும் , கதை சொல்லும் பாங்கும்

புத்திசாலிப் பெண்களைப் பற்றிய கதைகள்

பாடங்களை எப்படிக் கதை வடிவில் சொல்லிக் கொடுப்பது ?

இதன்  அடிப்படையில்  சென்ற ஆண்டு குவிகம்  இலக்கிய வாசலும் “கதை கேளு கதை கேளு”  என்ற  தலைப்பில்  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது .

( கடைப்பக்கம் பாஸ்கரன் அவர்களும் இந்த இதழில்  இதைப் பற்றி எழுதியிருக்கிறார்)

மேலும் இதனை விரிவு படுத்தி ஒரு பெரிய கதை சொல்லும் போட்டியாக மாபெரும் பரிசுகளுடன் நடத்த குவிகம்  ஒரு திட்டம் தீட்டியுள்ளது.

இந்த ஆண்டு விழாவில் நம்மால் கலந்து கொள்ள முடியாமல் போனாலும் அதன் தொகுப்பை இங்கே வழங்குகிறோம்:

 

 

 

No automatic alt text available.

கதை சொல்லிகளும் அமைப்பாளரும் :

Image may contain: 1 personImage may contain: 2 people, people standing and indoor

Image may contain: 1 person, standingImage may contain: 2 people, guitar

Image may contain: 2 peopleImage may contain: 2 people, people standing and indoor

Image may contain: 1 personImage may contain: 1 person

Image may contain: 1 person, standingImage may contain: 1 person, standing