கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘நாளைய இயக்குனர் சீசன் ஐந்து’ குறும்படப் போட்டியில் கலந்து கொண்டு தொடர்ந்து ஏழு ரவுண்டுக்கு ஏழு படங்களை தயாரித்து இயக்கிய ரஜிதா கல்ப்ரதா, அந்த போட்டியின் பல ரவுண்டுகளிலும் சிறந்த படம் சிறந்த இயக்கம் போன்ற பிரிவுகளில் முதல் பரிசை வென்றவர்.
இறுதிப் போட்டிக்கு இவர் இயக்கிய லைன் ஆஃப் கண்ட்ரோல் என்ற குறும்படம் எல்லோரின் ஏகோபித்த பாராட்டுதலுக்கும் ஆளாகி எல்லா பிரிவுகளிலும் முதல் இடத்தில் வந்து,ஒட்டுமொத்த அளவில் நாளைய இயக்குனர் சீசன் ஐந்தின் ‘டைட்டில் வின்னிங்’ படமாகவும் வந்திருக்கிறது .
இந்த ரஜிதா கல்பப்ரதா, சுஜாதாவின் “எல்டராடோ” கதையை ” அப்பாவின் கண்ணாடி ” என்ற பெயரில் குறும்படமாக எடுக்க, அது சிறந்த படம் சிறந்த இயக்கம் என்று இரண்டு விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது.
அதில் நடித்த நடிகர் ஜெயப்பிரகாஷ் சிறந்த நடிகர் விருது பெற்றார்.
அப்பாவின் கண்ணாடி ஒரு அழகான கவிதை போன்ற படம். ஷேக்ஸ்பியர் சொன்னது போல ” If you have tears shed them now”
கதையைப் படிக்க கீழே க்ளிக்குங்கள்
SUJATHA-eldorado (tamilnannool.com)
குறும்படம் பார்க்க கீழே க்ளிக்குங்கள் !