கண்ணாடி நண்பன் (எஸ் எஸ் )

கண்ணாடி நண்பன்

 

Related image

மாபெரும் போராட்டம் ! முடிவில் உனக்கே வெற்றி !
உலகம் உன்னைத் தலைவனாக்குகிறது ! தலைவிரித்து நீ ஆடாதே !
நேராகக் கண்ணாடி முன் நின்று உன்னையே நீ உற்றுப்பார் !
அந்த பிம்பம்  சொல்வதைக் காது கொடுத்துக் கேள் !

உன் அம்மா அப்பா மனைவி மக்கள் ஆயிரம் சொல்லட்டும் !
அவர்கள் கருத்துக்கு நீ செவி சாய்க்க வேண்டியதில்லை !
பின் யாருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் ?
உன்னையே பார்க்கும் கண்ணாடி நண்பனின் சொல்லைக்   கேள் !

உன் கண்ணாடி நண்பனை மகிழ்வி ! மற்றதைத் தள்ளி விடு!
அவன் உன்னுடன் என்றும் இருந்தவன் – இருக்கப் போகிறவன் !
அந்த பிம்பம்  உன் நண்பனாக இருந்தால் மட்டுமே
வாழ்வில்  நீ வெற்றி பெற்றவன் ஆவாய் !

ஆண்டாண்டு காலமாய் உலகை நீ முட்டாளாக்கலாம் !
உலகமும் அதை நம்பி உன்னைத் தட்டியும் கொடுக்கலாம் !
ஆனால் நீ உன் கண்ணாடி நண்பனை ஏமாற்றினாய் என்றால் !
உன் கடைசிப் பரிசு வெடித்த இதயமும் கண்ணீரும் தான் !

 

( 1934 இல் பீட்டர் டேல் விம்ப்ரோ அவர்களால் எழுதப்பட்ட இந்தக் கவிதை இன்றும்   பிரபலமாய் இருப்பதற்குக் காரணம் இதன் சொற்களில் உள்ள சத்தியம் தான் ! 

அதன் ஆங்கில மூலத்தைப் படித்தால் அதன் பெருமை இன்னும் நன்கு புரியும் !  )

Image result for watching self in the mirror

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.