வருகிற மார்ச் 25ந்தேதி நடைபெறும் குவிகம் இலக்கியவாசல் நிகழ்வு, நமது 24 வது நிகழ்வாகும்.
இரண்டு வருடங்களாக இலக்கியக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவது பெரிய சாதனை இல்லை என்றாலும் மனதுக்கு மகிழ்வைக் கொடுத்துவந்த நிகழ்ச்சித் தொகுப்பாக உள்ளது.
நாம் கடந்து வந்த பாதை : நிகழ்வைப் பற்றிய முழு விவரம் அறிய கோடிட்டவற்றைக் கிளிக்குங்கள் :
- இனிதே திறந்தது இலக்கிய வாசல் – திருப்பூர் கிருஷ்ணன், வா வே சு , ஜெயபாஸ்கரன் – ஏப்ரல் 2015
- நான் ரசித்த ஜானகிராமன் – கலந்துரையாடல் – மே 2015
- திரு பிரபஞ்சன் நேர்காணல் – ஜூன் 2015
- சிறுகதைச் சிறுவிழா – ஜூலை 2015
- முகத்தை மறைக்குதோ முகநூல் – கவியரங்கம் – நீரை அத்திப்பூ – ஆகஸ்ட் 2015
- திரைப்பாடல்களில் இலக்கியம் – கலந்துரையாடல் – செப்டம்பர் 2015
- அசோகமித்திரன் படைப்புகள் – சாரு நிவேதிதா – அக்டோபர் 2015
- பாண்டிய நெடுங்காபியம் – திருமதி ஸ்ரீஜா – நவம்பர் 2015
- நூல் அறிமுகம்- நேர்பக்கம் – அழகிய சிங்கர் – டிசம்பர் 2015
- புத்தக உலகம் – ஒரு பதிவு – ரவி தமிழ்வாணன் – ஜனவரி 2016
- பொன்னியின் செல்வன் வெற்றி ரகசியம்- பாம்பே கண்ணன் – பிப்ரவரி 2016
- நாடகம் – “நேற்று இன்று நாளை”- ஞானி – மார்ச் 2016
- முதலாம் ஆண்டுவிழா – இயல் -இசை – நாடகம் : அசோகமித்திரன், இந்திரா பார்த்த சாரதி, வில்லுப்பாட்டு, ‘மனித உறவுகள்’ நாடகம் – ஏப்ரல் 2016
- நானறிந்த சுஜாதா” – சுஜாதா தேசிகன் + ரகுநாதன் – மே 2016
- வலையில் சிக்கும் இலக்கிய மீன்கள் – கலந்துரையாடல் -ஜூன் 2016
- “கதை கேளு.. கதை கேளு” – சிறுகதை சொல்லும் நிகழ்வு – ஜூலை 2016
- சமீபத்தில் படித்த புத்தககங்கள் – எஸ் ராமகிருஷ்ணன் – ஆகஸ்ட் 2016
- இன்று … இளைஞர் … இலக்கியம் – செப்டம்பர் 2016
- இணையத்தில் கோமலின் சுபமங்களா – திருப்பூர் கிருஷ்ணன் -அக்டோபர் 2016
- எல்லைகளை விஸ்தரித்த எழுத்துக் கலைஞன்; ஜெயகாந்தன் ஆவணப்படம் – ரவி சுப்ரமணியன் – நவம்பர் 2016
- நான் சந்தித்த அபூர்வ இலக்கிய மனிதர்கள்- இந்திரன் -டிசம்பர் 2016
- லா ச ராவின் ” அபிதா” – ஸப்தரிஷி & கலந்துரையாடல் – ஜனவரி 2017
- சிறுகதைகள் அன்றும் இன்றும் – ரகுநாதன் -பிப்ரவரி 2017
- இளைஞர் விரும்பும் இலக்கியம் – சரஸ்வதி – மார்ச் 2017 (25ந்தேதி நடைபெறும்)