தமிழக அரசியல் வானில் கரு மேகங்கள் !
- ஜெயலிதா அவர்களின் மறைவு
- சசிகலா முதல்வராக முயற்சி
- உச்ச நீதி மன்றத்தின் தண்டனையினால் சசிகலா சிறைவாசம்
- தினகரன் துணை பொதுச் செயலாளர்
- பன்னீர்செல்வம் போர்க்கொடி
- கூவத்தூர் விடுதியில் 122 எம் எல் ஏக்கள் கூண்டோடு அடைப்பு
- எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தேர்ந்தெடுத்தல்
- அடி தடி ரகளையுடன் சட்டசபையில் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி
- சசிகலா பொதுச் செயலாளர் பதவி வகிப்பது முறையா ? தேர்தல் அதிகாரிகள் ஆராய்ச்சி
- உள்ளாட்சித் தேர்தல் விரைவில்
- இத்தனை அரசியல் போட்டா போட்டிகளுக்கு நடுவே , வாடி வாசல் (ஜல்லிக்கட்டு) , நெடுவாசல் (ஹைட்ரோகார்பன் ) போராட்டங்கள் !
இவையெல்லாம் தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய செய்திகள்
இவற்றையெல்லாம் விட எகிறும் வட இந்தியா தேர்தல் நிலவரம்
- உத்தரப் பிரதேசத்தில், மற்றும் உத்தர் கண்டில் பி ஜே பியின் இமாலய வெற்றி
- மணிப்பூர், கோவா இரண்டையும் பி ஜே பி யே கைப்பற்றும் நிலை
- பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி
மொத்தத்தில் மோடியின் கரங்கள் பலமடைந்திருக்கின்றன.
செல்லா நோட்டு விவகாரம் செல்லா நோட்டாகிவிட்டது.
நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல இதைவிடச் சிறந்த தருணம் கிடைக்காது!
மோடிஜி !
நாட்டை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உங்கள் பின் அணிவகுத்து வரத் தயாராயிருக்கிறோம்!