ஒகே காதல் கண்மணியில் ‘கணபதி கணபதி’ என்று அழைத்துக் கொண்டு வரும் பிரகாஷ் ராஜின் மனைவியை ( லீலா சாம்ஸன்) அவ்வளவு சுலபமாக நாம் மறக்க முடியுமா?
அந்தப் பாட்டுகுருவிற்கு வந்தது ஞாபகமறதி வியாதி !
அதைப்போல வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி வியாதியைப் பற்றிய உணர்வு பூரணமான ஒரு குறும்படம்.
இந்த வியாதி நம் பெற்றோர் மற்றும் உறவினர் நண்பர்களுக்கு வந்திருக்கிறது என்பது தெரியாமல் அவர்களை நாம் எப்படிக் கேவலமாக நினைக்கிறோம் என்பதைச் சொல்லும் காவியம்.
இது குறும்படம் அல்ல. பெரும் பாடம்!