நீலிமா டால்மியா ஆதார் எழுதிய ” கஸ்தூரிபாவின் ரகசிய நாட்குறிப்பு “
சுதந்திர இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்று உலகமே தலை வணங்கும் பெயர் பெற்றவர்.
ஆனால் தன்னை விட 6 மாதம் சிறியவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை 13 வயதிலேயே மணந்து 62 வருடம் அவருடன் காலம் கழித்த கஸ்தூரிபாவிற்கு அவர் எப்படிப்பட்ட கணவராக இருந்தார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!
அதனால்தான் கஸ்தூரிபாவின் பார்வையில் அன்று நடந்த சம்பவங்களை தன்னிலையாக ஒரு டயரியின் வடிவில் கற்பனையாக நீலிமா டால்மியா ஆதார் எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மறுபக்கம் இருக்கும். இது காந்தியின் மறுபக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம்.
மகாத்மா என்ற அவரது முகமூடியைக் கழற்றி உண்மையான முகத்தைக் காட்டும் நூல்.
ஒரு பெண்ணாக கஸ்தூரிபா எப்படிப் போராடித் தோற்றார் என்பதை விளக்கும் அருமையான நூல்.
அன்பு, பாசம், துயரம், விரக்தி,பயம், கோபம், உணர்வு, பொறுமை, காமம், காதல் , உறவு போன்ற எல்லா உணர்ச்சிகளையும் கஸ்தூரிபாவின் முகத்தில் காட்டும் நூல் இது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
காந்தியை நாம் தேசப்பிதாவாகத்தான் பார்த்தோம். ஆனால் இந்த நாவலில் அவரை ஹரிலாலின் தந்தையாக கஸ்தூரிபாவின் கணவனாக ஒரு சாதாரண மனிதனாகப் பார்க்கிறோம்.
நமது நண்பர் ஒருவர் இந்த ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.
அது வெளிவந்ததும், கஸ்தூரிபாவின் நாட்குறிப்பைத் தமிழிலிலேயே படிக்கலாம்.
அதுவரை ஆங்கிலத்தில் படியுங்கள் : ” The Secret Diary of Kasthurba”
|