இந்தியத் திரைப்பட வரலாற்றில் ஒரு சரித்திரப்படம் ஹாலிவுட் அளவிற்கு வசூலில் சாதனை செய்திருக்கின்றது என்றால் அதற்கு நாம் நன்றி சொல்லவேண்டியது எஸ் எஸ் ராஜ்மவுலியையும் அவரது பாகுபலியையும்தான்.
அதன் பிரும்மாண்டத்தை டிவியிலும் கம்ப்யூட்டரிலும் பிடிக்க முடியாது. தியேட்டரில் பார்த்தால்தான் அதன் அழகு புரியும்.
அந்தப்படத்தின் டீசர் இதோ!
பார்த்தவர்கள் பிரமிக்கிறார்கள் ! இந்தியாவையே ஓட்டு மொத்தமாக நிமிர்ந்து பார்க்க வைத்த ஒரு திரைப்படம் ! அன்று வாசன் சந்திரலேகா மூலம் செய்த புரட்சியை ராஜ்மௌலி பாகுபலி மூலம் செய்திருக்கிறார்! அவரை எப்படிப் பாராட்டினாலும் தகும்.
இனி மகாபாரதமும் , ராமாயணமும், பொன்னியின் செல்வனும் திரையில் நம்மைக் கவர வரும்.
நல்ல தொடக்கம் !