கம்ப்யூட்டர் காதல்
காதல் என்பது சாப்ட்வேர்
காமம் என்பது ஹார்ட்வேர்
இரண்டும் சேர்ந்து படைத்த ப்ரோக்ராம்
குழந்தை என்பது அதன் பேர்
மடியில் தவழும் லேப்டாப்பாக
மாறிட எனக்கு வரம் தா
வளைவுகள் என்னும் கீ போர்டில்
வருடிட எனக்கு கரம் தா!
ஆடைகள் என்ற விண்டோசை
மெல்லத் திறந்திடு சீசேம் !
ஓப்பன் கோர்ஸ் ஒஎஸ்சை
முழுதாய் திறந்தால் பப்பி ஷேம்!
மேனி முழுதும் அம்பாய் மாறி
தேடுவது உந்தன் மவுசா!
கிளிக் கிளிக் என்று அமுக்கி என்னை
உசுப்புவது உந்தன் ரவுசா!
கருப்புச் சேலை திரையில்
கலர் கலராக வருவாயா
கண்ணை அடித்து வெப் கேமில்
என்னைப் படமாகப் பிடிப்பாயா
எந்தன் காதல் வரிகளை
மைக்கில் கேட்டு வந்தாயா
உந்தன் மோக முனகலை
ஸ்பீக்கர் போட்டு காட்டாதே
உணர்வுகள் என்னும் வெப் சைட்டில்
உறவுகள் கொண்டோம் இன்டர்நெட்டில்
நமக்குள் இருக்கும் ரகசியம் காக்க
பாஸ்வேர்ட் அதற்குத் தேவையில்லை
நீலக் கண்ணால் பார்க்கும் போது
ப்ளூடூத் ப்ளுரே தெரிகிறதே
மேடம் உந்தன் மோடத்தில்
காதல் பாடம் படித்தேனே
வைப் இல்லாவிட்டால் பரவாயில்லை
வை-பை இருந்தால் போதும் எனக்கு
வாடி என்றும் அருகில் அழைத்து
டிவிடியை சுழல வைத்தேன்
பென் டிரைவ் ஒன்றை சொருகிக் கொள்
டேட்டா பேஸூம் திறந்து கொள்ளும்
உடம்பின் சூட்டை குறைத்திடவே
கூலிங்க் பேடாய் நான் வரவா
காதல் என்ற சமூக வலையில்
உதடு தான் பேஸ்புக் வலைப் பதிவா
முத்தமிட்டு நான் போனால்
சத்தமில்லாமல் லைக் போடு
டேப்லெட் உன்னிடம் இருக்கும் வரை
நேரடிக் காதலில் தவறில்லை
பேட்டரி நன்றாய் இருக்கும் வரை
டிஸ்சார்ஜ் பற்றிக் கவலையில்லை
மெமரி சரியாய் இருக்கும் வரை
வைரஸ் கவலை தேவையில்லை
தேதிகள் கொஞ்சம் தவறிப் போனால்
ஆன்டி வைரஸ் போட்டுக்கொள்
ஹார்ட் டிஸ்க் சரியாய் இருக்கும் வரையில்
பேக்கப் பற்றி பயமில்லை
பிளக் அண்ட் பிளே வந்தபிறகு
குஷிக்கு கொஞ்சமும் குறைச்சலில்லை
காதல் டிஜிட்டலாய் மாறும் போது
மொழிகள் அதற்குத் தேவையில்லை
விண்டோஸ் மூடிச் செய்தால் காதல்
திறந்த வெளியில் செய்தால் காமம்
உடம்பின் வளைவுகளைத் தெரிந்துகொள்ள
ஸ்கேனர் எனக்குத் தேவையில்லை
காதல் பயணம் செய்யும் போது
டிரைவர் எதுவும் தேவையில்லை
யாரும் நம்மை பார்த்து விட்டால்
கண்ட்ரோல் ஆல்ட் டெல் போட்டிடுவோம்
நிறுத்து நிறுத்து என்றாலும்
ஸ்டார்ட் பட்டனைத் தான் அமுக்க வேணும்
எல்லாம் நன்றாய் முடிந்த பின்னர்
ஸ்லீப் மோடுக்கு போயிடுவோம்
சாதனைப் பட்டியலைப் பார்த்த பின்னர்
ரீ- ஸ்டார்ட் மீண்டும் செய்திடுவோம்!
Pingback: கம்ப்யூட்டர் காதல் – (எஸ் எஸ் ) — குவிகம் – தமிழ்பண்ணை.நெட் www.tamilpannai.net