என்னடா நடக்குதிங்கே?
மதியம் ஜூஸ் குடிக்கக் கடைக்கு போனா கடையில, மேஜை_காலி_இல்ல.. எல்லாம் காதல் ஜோடிங்க ..நான் தனியா வேற போயிருந்தேன்.. என்னடா பன்னலாம்னு யோசிச்சேன் ..
போன எடுத்து காதுல வச்சிட்டு ..சத்தமா..
#மச்சி_உன்_ஆளு_யார்கூடவோ_இங்க_ஜூஸ்_குடிக்குதுடா_ அப்படின்னேன்… அவ்ளோதான் #அஞ்சி_டேபிள் காலி #
ஹாயா உட்கார்ந்து ஜூஸ் குடிச்சிட்டு வந்துட்டேன் …

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”
– கணக்கதிகாரம்-
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !
இது எப்படியிருக்கு?
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))
பிரபல பொருளாதார நிபுணர் ரயிலில் போகும்போது பக்கத்தில் இருந்த கல்லூரிப் பெண்ணிடம் பேசிக்கொண்டு வந்தார்.
“நீங்க என்ன பண்ணறீங்க ” என்று கேட்டாள் அவள்.
” நானா? இந்தியப் பொருளாதாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன் ” என்றார் அவர்.
அந்தப் பெண் உடனே ” நான் போன வருஷமே அதைப் பாஸ் செய்துவிட்டேன்”
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))
விடுமுறைக்கு சித்தி வீட்டுக்குச் சென்றிருந்த குட்டிப்பெண் கேட்டாள்:
சித்தி ! நான் பிரிட்ஜிலிருந்த மாம்பழத்தை சாப்பிட்டுக்கவா?
சாப்பிட்டுக்கோம்மா!
ரொம்ப தேங்க்ஸ் சித்தி
இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் சொல்லறே? பசிக்குதா கண்ணு ?
இல்லை சித்தி! நான் ஏற்கனவே அதைச் சாப்பிட்டுட்டேன்
(((((((((((((((((((((((((((((((((((((((( )))))))))))))))))))))))))))))))))))))))))))
டாக்டர் ! போன தடவை நீங்க எழுதிக் கொடுத்த மருந்தச் சாப்பிட்டதும் வயித்து வலி சரியாப் போயிடுச்சு ! ரொம்ப தேங்க்ஸ் !”
போன தடவை நான் மருந்தே தரலையே! பேனா சரியா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்ததை எடுத்துக்கிட்டுப் போயிட்டியா? “
(((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
ஒரு பேரிளம்பெண்ணுக்கு வயது 42. ஆனால் 24 வயது மாதிரி தன்னை நினைத்துக் கொள்வாள். அது மாதிரி உடை அணிவாள். வெளியில் போகும்போதெல்லாம் கடைக்காரர்களிடம் தனக்கு என்ன வயது என்று கேட்பாள். அவர்கள் 25 27 28 என்றே சொல்வார்கள். இல்லை எனக்கு 42 என்று பெருமையாகச் சொல்லுவாள்.
ஒருமுறை பஸ் ஸ்டாப்பில் நின்ற கிழவரிடம் ” எனக்கு என்ன வயதிருக்கும்?” என்று கேட்டாள். அவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ” நான் உன்னை முத்தமிட்டால் சரியான வயசைச் சொல்லிவிடுவேன். அது என் ஸ்பெஷாலிட்டி!” என்றார்.
அவள் கொஞ்சம் ஆடிப் போனாலும் ‘சரி, டெஸ்ட் பண்ணலாம்’ என்று ஒகே என்று சொன்னாள். கிழவரும் அவளை முத்தமிட்டுவிட்டு ” உனக்கு வயது 42 ” என்று சொன்னார். ஆடிப் போய் விட்டாள். ” எப்படிக் கண்டுபிடித்தீங்க! அந்த ரகசியத்தை எனக்குச் சொல்லிக் கொடுங்க” என்றாள்.
கிழவரும் ” ஒண்ணுமில்லே! நேத்து கடைக்காரன்கிட்டே நீ கேட்டுக்கிட்டு இருந்தபோது நானும் அங்கே சாமான் வாங்கிக்கிட்டிருந்தேன் ” என்றார்.
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))