மே 27, 2017 சனிக்கிழமை:
குவிகம் இலக்கிய வாசலின் இருபத்தி ஆறாவது நிகழ்வாக “புத்தகங்கள் வெளியிட எளிய வழி” என்னும் தலைப்பில் திரு ஸ்ரீகுமார் உரையாற்றி பல உபயோகமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவற்றில் ஒரு சில
புத்தககங்கள் அச்சடிக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் ஒரு பதிப்பு என்பது 2500 பிரதிகள் என இருந்தது.
- அச்சுக்கோர்த்தல் கட்டாயம் என்பதால் அந்தச் செலவு ஒரு புத்தகம் அடித்தலோ 2500 அடித்தாலோ ஒன்று தான் என்பதால் அச்சடிக்கப்படும் புத்தககங்களின் எண்ணிக்கை கூடக்கூட புத்தகத்தின் அடக்க விலை குறையும்.
- இப்போது தேவைக்கேற்ப அச்சடிக்கும் ‘ PRINT ON DEMAND’ முறையில் ஒரு புத்தகமோ ஆயிரம் புத்தகங்களோ அடக்கவிலை ஒன்றுதான்.
- இம்முறையில் குறைந்த செலவில் குறைந்த எண்ணிக்கை பிரதிகள் அச்சடித்து, தேவைப்பட்டால் மேலும் பிரதிகள் தயார் செய்து கொள்ளலாம்.
- இந்த முறையில் அடிக்கப்படும் புத்தகத்தின் தரம் லித்தோ போன்ற மற்ற முறைகளில் அடிக்கப்படும் புத்தகத்தின் தரத்திலேயே இருக்கும்.
- இந்த அச்சு எந்திரம் போட்டோ காபி எடுக்கும் அதே ஜெராக்ஸ் என்னும் கம்பனி உடையது என்பதால் இதனை ‘ஜெராக்ஸ்’ என்று வழக்கமாக அறியப்படும். போட்டோ காப்பி போன்று நாளடைவில் அழிந்துவிடும் எனத் தவறாக எண்ணப்படுகிறது.
- வணிகமுறையில் அல்லாது தனது எழுத்து பிறரை அடையவேண்டும் என நினைக்கும் பலருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
அவருடைய உரைக்குப் பின் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள். பெரும்பாலோர் தங்கள் புத்தகங்களை வெளியிட அதிகம் செலவு செய்தவர்கள் எனத் தெரிய வந்தது. கிடைத்த தகவல்கள் பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தவிர்க்கமுடியாத காரணத்தால் நிகழ்வு நடக்கும் இடம் மாற்றம் செய்ய நேரிட்டது. புதிய இடம் பற்றிய தகவல் அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அம்புஜம்மாள் சாலை ஸ்ரீனிவாச காந்தி நிலையம் வந்து திரும்பிய ஒரு சிலரிடம் மன்னிக்க வேண்டுகிறோம்.
*****************************************************************************
வருகிற ஜூன் 24, சனிக்கிழமையன்று இலக்கிய சிந்தனையும் குவிகம் இலக்கியவாசலும் இணைந்து வழங்கும் நிகழ்வு ஆள்வார்ப்பெட்டை அம்புஜம்மாள் தெருவில் உள்ள ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் 6 மணிக்கு நிகழ உள்ளது.
குவிகம் இலக்கிய வாசல் சார்பில் சந்தியா பதிப்பகம் நடராஜன் “தமிழில் அகராதி” என்ற தலைப்பில் பேசுகிறார் !
கேட்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
அனைவரும் வருக !!