ஓர் அமெரிக்கர் இந்தியாவில் வந்து பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கினார் என்பது எவ்வளவு வியப்பாக இருக்கிறது?
அதுவும் இவர் தான் எம். ஜி. ராமச்சந்திரன், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன் ஆகிய நடிகர்களை அறிமுகப்படுத்தினார் என்றால் இன்னும் எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது?
எம்ஜியாருக்குத் தாடையில் ஒரு பள்ளம் இருப்பதால் அவர் கதாநாயகராக நடிக்கத் தகுதியானவர் இல்லை என்று மறுத்த டைரக்டர் அவர். முடிவில் தாடையில் ஒரு ஒட்டுத் தாடியுடன் நடிப்பதை ஒப்புக் கொண்ட டைரக்டர் அவர் ( படம் மந்திரி குமாரி)
அந்தக்கால சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை இயக்கியவர்.
காற்றினிலே வரும் கீதம் பாடலைப் பாடிய எம் எஸ் சுப்பலக்ஷ்மியின் மீரா படத்தை இயக்கியவர் அவர்.
அவர் தான் எல்லிஸ் டங்கன் என்ற அமெரிக்கர் . அவர் இயக்கிய படங்கள்:
நந்தனார் (1935) – சில காட்சிகள் மட்டும்
சதிலீலாவதி (1936)
சீமந்தினி (1936)
இரு சகோதரர்கள் (1936)
அம்பிகாபதி (1937)
சூர்யபுத்ரி (1940)
சகுந்தலா (1940)
காளமேகம் (1940)
தாசிப் பெண் (1943)
வால்மீகி (1945)
ரிடர்னிங் சோல்ஜர் (1945)
மீரா (1945)
பொன்முடி (1950)
மந்திரி குமாரி (1950)
அவரைப் பற்றி எடுத்த ஒரு ஆவணப் படத்தை ( சற்று நீண்ட படம்தான் ) பார்த்து ரசியுங்கள். தமிழ்த் திரைப்படச் சரித்திரத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு நிச்சயமாக இது பிடிக்கும்!!