ஸ்ருதி டிவி கபிலன் அவர்கள் இலக்கிய வட்டத்தில் மிகவும் அறிமுகமான நபர். அவர் தனது வீடியோ காமிராவுடன் அரங்கத்தில் இருந்தார் என்றால் அந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட்.
சென்னையில் இலக்கியக் கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கு நிச்சயம் ஆஜராகி இருப்பார் கபிலன். இலக்கியக் கூட்டத்தை வீடியோவாக ஆவணப்படுத்தும் ஆச்சரிய இளைஞர். ‘யூ டியூப்’பில், ‘ஸ்ருதி டிவி’ என டைப் செய்த மறுவிநாடியே அவர் எடுத்த வீடியோக்கள் கொட்டுகின்றன.
‘‘உலக சினிமாவும் இலக்கியமும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி. அதனாலயே இலக்கியக் கூட்டங்களுக்குப் போறதை ஒரு கடமையாவே வைச்சிருந்தேன். பேசற எழுத்தாளர்கள் அற்புதமான பல கருத்துக்களை உதிர்ப்பாங்க.கேட்கும்போதே நமக்குள்ள பல கதவுகள் திறக்கும். உற்சாகமும் தொத்திக்கும். இதுக்குப் பிறகு உலகத்தை நாம பார்க்கிற பார்வையே வேறயா இருக்கும். ஆனா, இதெல்லாம் ஆவணமாகலை. அதனாலயே அப்பப்ப கேட்கறது அப்பப்பவே மறைஞ்சுடுது. இப்படி இருக்கக் கூடாதுன்னு நினைச்சேன். கூட்டங்களுக்கு வர்றவங்க மட்டுமில்ல… வர முடியாதவங்க கூட எப்ப விருப்பப்பட்டாலும் அதைக் கேட்கற மாதிரி இருக்கணும். இந்த எண்ணத்தோடதான் இந்த சேனலை ஆரம்பிச்சேன்…’’ என்கிற கபிலனின் பூர்வீகம் திருவாரூர் அருகிலிருக்கும் திருத்துறைப்பூண்டி.
(நன்றி : குங்குமம் ஆன்லைன்)
மேலும் , கபிலன் அவர்கள் விகடன் பேட்டியில் கூறியது:
” 1,600-க்கும் மேற்பட்ட வீடியோ ஃபுட்டேஜஸ் எங்ககிட்ட இருக்கும். இதுல 1,350 மேல் இலக்கியம் சம்பந்தப்பட்ட வீடியோக்கள்தான். எனக்குத் தெரிஞ்சு வேற யாரிடம் இவ்வளவு இலக்கிய வீடியோக்கள் இருக்காது. `இந்த வீடியோக்களை எல்லாம் யூடியூப்ல அப்லோடு பண்ணி நிறைய காசு பார்க்கிறோம்’னு சிலர் நினைக்கலாம். ஆனா, இதன்மூலம் மாசம் மூவாயிரம் ரூபாய் கிடைச்சாலே ஆச்சர்யம்’’ என்கிறார் ஸ்ருதி டிவி கபிலன். ஆனால், இவர் ஆவணமாக்கி வைத்திருக்கும் அத்தனை வீடியோக்களும் காலத்துக்கும் பொக்கிஷமானவை.
இவர் நமது குவிகம் இலக்கிய வாசலின் பல நிகழ்வுகளைப் பதிவு செய்து தனது ஸ்ருதி டிவியில் வெளியிட்டிருக்கிறார்.
அவர் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!