ஜி‌ எஸ் டி – லதா ரகுநாதன்

Image result for GST

“சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்” இதுதான் நாம் இப்போது பேசப்போகும் GST (Goods & Services Tax) க்கான பின்னணி. ஒரு பொருள் தயாரிப்பதற்கான விலையின் மேல் ஒவ்வொரு நிலையிலும் போடப்படும் வித விதமான வரிகளால் அந்த விலை ஒரு பலூன் போலப் பெருத்து, உபயோகிப்பவர் கையில் வந்து சேரும்போது 1:100 விகிதத்தில் ஏற்றம் கண்டு விடுகிறது. இதைக்குறைக்கவே இந்த GST முயற்சிகள் எடுக்கப்பட்டன.

என்ன காரணத்தினால் இந்த விலை பலூனிங்……?

இதற்கு நம் வரி விதிப்பு முறைகளைப்பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்தியாவைப்பொறுத்த மட்டில் வரிகள் இரண்டு வகை. நேரடி வரி, (Direct tax) மற்றும் மறைமுக வரி (Indirect Tax). நேரடி வரி என்பது யார் கையில் வருமானம் உள்ளதோ அவர்தான் அந்த வரியைச்செலுத்த வேண்டும் – மாநகராட்சி வரி, சொத்து வரி, வருமான வரி, அன்பளிப்பு வரி போன்றவை. மறைமுக வரி என்பது , இதைக் கட்டப்படும் நேரம், இடம் , கட்டுபவர் யாரோ ஒருவர்…….இது கடைசியாக நுகர்வோர் தோள்களில் வந்து சேரும். இந்த வரி கட்டுகிறோம் என்பதுகூடப் பலருக்குத்தெரிந்திருப்பதில்லை. ஏனென்றால் நமக்கு விற்கப்படும் விலையில் ஒரு பகுதியாக ஏற்றப்பட்டு நம்மிடம் வசூலிக்கப்படும். இந்த வகை வரியாக Service tax (சேவை வரி), Central Excise duty (கலால் வரி), Value added tax(வாட்), Customs duty (சுங்க வரி), Sales tax ( விற்பனை வரி),Octroi (மதிப்புக்கூட்டு வரி), Securities Transaction Tax ( பரிவர்த்தன வரி).

நாம் வாங்கும் பொருள்களின் விலை ஏறுவதற்குக்காரணம் இந்த இரண்டாவது வகை வரிகளே. இவை எப்போது வசூலிக்கப்படுகின்றன?

சுங்க வரி – 1962ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வரி நாம் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யும் பொருட்களின் மீதான வரி. இதன் கீழ் Basic duty, Additional duty, counter veiling duty,  anti dumping duty protective duty என்றெல்லாம் 13 வகையான வரிகள் போடப்படுகின்றன.

கலால் வரி – இது தயாரிக்கப்படும் பொருள்கள் மீதான வரி. தொழிற்சாலையில் வாசலில் இந்த வரிக்கான பொறுப்பு ஏற்கப்பட்டுவிடும். இதன் கீழ் special Excise duty, Additional duty, என்று எட்டு விதமான வரிகள் விதிக்கப்படுவது உண்டு.

சேவை வரி – இது சேவைகள் மீது (Service providers) போடப்படும் வரி.

விற்பனை வரி – இது வாங்கி விற்கப்படும் பொருள்களின் மீதான வரி. இது மத்திய அரசால் CST என்றும் , மாநில அரசால்  ST என்றும் போடப்படுகிறது. இவை தவிர மாநில அரசுகள் works contracts tax, Turnover tax, Purchaser tax என்றும் வசூலிக்கும்.

VAT என்னும் மதிப்புக்கூட்டு வரி 2005 ஏப்ரலில் இருந்து அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.இஂந்த வரி , விற்பனை வரிக்குப் பதிலாக . அதன் முன்னேற்றம் என்றும் சொல்லலாம்.

பரிவர்த்தனை வரி – இந்த வரி பங்குச்சந்தைகளில் பங்குகள் வாங்கவோ விற்கவோ செய்யும்போது வசூலிக்கப்படும்.

சரி வரிகள் எவை என்று பார்த்துவிட்டோம். இதில் எப்படி விற்பனை வரி சில மாறுதல்களுடன் VAT ஆக  உருப்பெற்றது என்று பார்ப்போம்.                                                                                                                                        
நாம் ஒரு பொருளை வாங்கி விற்கும்போது மத்திய அரசு அதன் மீது மத்திய வரி போடுகிறது. ஆனாலும் அந்தப்பொருள் மாநிலத்தில் விற்கப்படும்போது அந்த மாநிலத்துக்கான விற்பனை வரியும் முதன் முறை விற்கும்போது விதிக்கப்படும். இதனால் ஒரே பொருளுக்கு இரண்டு முறை வரி விதிக்கப்பட்டு அதன் விலை ஏற்றம் உண்டாகிறது. முடிவில் இவை நுகர்வோரின் தலையில் வந்து விழுகிறது. இந்தப்பிரச்சனைக்கு முடிவு கட்டவேதான் VAT அறிமுகம் செய்யப்பட்டது. பின்னணியில் இரண்டு காரணங்கள் சொல்லப்பட்டன.

மாநிலங்களுக்குள்ளான வரி விகித மாறுபாடுகளைக்குறைக்க, பின் ஒரே வரி விகிதம் என்று ஒரு திட்டத்தை ஏற்படுத்தவும். ஆனால் மாநிலங்கள் வசூலிக்கும் octroi duty, Entry tax, works contract tax, entertainment tax இவை இந்த வரி விகிதத்தில் கொண்டு வரப்படாததால் எதை நிறைவேற்ற VAT திட்டம் கொண்டு வரப்பட்டதோ அது நிறைவேறாமல் இருந்தது.
இதைப்போலக் கலால் வரியிலும் MODVAT என்னும் திட்டம் 1986இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டமும் CENVAT என்று 1/4/2000 அன்று மாற்றியமைக்கப்பட்டது.

இவற்றைப் போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் காரணம் வரியின் மேல் வரி என்னும் நிலையைக்கட்டுப்படுத்திப் பொருட்களின் மேல் ஏற்றப்படும் வரிச்சுமையைக்  குறைப்பதற்காகத்தான்.  VAT இஂந்த இலக்கை அடைய முடியாமல் போனதற்குக்  காரணம், உற்பத்தி மற்றும் சேவையை இரு விதமாகப் பிரித்துப் பார்த்து, வரி விகிதம் ஓருமைப்படாமல் இருந்ததுதான் .

இந்தக்  குறையை நீக்க அறிமுகம் ஆனதுதான் ஜி எஸ் டி .

முதலில் சொன்ன VAT என்பதின் அடுத்த கட்ட திட்டமைப்புதான் GST.  VAT டில் சேவை வரி மட்டும் எடுக்கப்பட்டு, மாநிலங்களுக்குள்ளான விகித வேறுபாடுகளை வாங்கும்பொருளின் மேல் செலுத்தப்பட்ட வரி, input credit ஆக எடுக்கப்பட்டு, அடுத்த நிலையில் கட்டப்படும் வரியில் சரி செய்யப்பட்டு வந்தது . தற்போது GST யின் கீழ், சேவை வரியுடன் வேறு பல மறைமுக tax வரிகள் இணைக்கப்பட்டு , ஒரு முழுமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.  தவிர இந்த அமைப்பின் கீழ் பொருட்களும், சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ஒரு வரி விகிதத்தின் கீழ் அமைக்கப்படும். இப்போது பரிந்துரைக்கப்பட்ட GST திட்டத்தின் கீழ் மூன்று வித வரிகள் உள்ளன:

1. CGST 2. SGST  3. IGST

CGST இன் கீழ் கலால் வரி( CENVAT) சேவை வரி (Service Tax) சுங்க வரியின் பகுதியான Additional duties of customs and taxes , எல்லாம் ஓருகிணைந்து, ஒரு வரியாக வசூலிக்கப்படும்.

SGSTயின் கீழ்  VAT,CST, Purchase Tax, Entertainment tax, Luxury tax, Lottery tax, Electricity duty and state surcharges, specific cess, Excise duty on Tobacco products, Entertainment tax, entry tax for local bodies ஆகியவை வசூலிக்கப்படும்.

IGST என்பது மாநிலங்களுக்குள் நடக்கும் வியாபாரத்தின்( inter state supplies)  மீது மத்திய அரசால் வசூலிக்கப்பட்டு, பின் மாநில அரசுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

ஏன் இந்த மாறுதல்…. நுகர்வோருக்கு ஏற்படும் லாபம் …….ஒரு உதாரணம் பார்ப்போம்.

(A) உற்பத்தியாளர் –

மொத்த விற்பனையாளர்                            VAT (Rs.)                  GST (Rs.) 

உற்பத்தி செலவு                                                100000/-                      100000/-

Add: உற்பத்தியாளரின் லாபம்                  20000/-                         20000/-அடிப்படை விலை                                           120000/-                      120000/-

Add: மத்திய கலால் வரி @ 8%                       8000                          NIL

Add: சேவை வரி @ 10%

போக்குவரத்து,வேலைக்குக்                       4000                          NIL

கொடுத்தது (Job work) 8000/-4000/- NILNIL (Included in GST) 

Add: Value Added Tax @ 12.5%                     16500/-                       NIL

Add: Central GST @ 12%                                 NIL                          14400/-

Add: State                                                      148500/-                      144000/-

(B) மொத்த விற்பனையாளர் to

நுகர்வோர்மொத்த விற்பனையாளர்

விலை                                                              132000/-                120000/-

Add: மொத்த விற்பனையாளர்

லாபம்   @ 10%                                              13200/-                    12000/-

Total                                                               145200/-                   132000/-

Add: Value Added Tax @ 12.5%                 1650/-                      NIL

Add: Central GST @ 12%                              NIL                      1440/-

Add: State GST @ 8%                                   NIL                          960/-

(C) மொத்த விற்பனையாளர்

to நுகர்வோர்  நுகர்வோர்

விலை                                                        145200/-                 132000/-

Add: லாபம் @ 20%                                 29040/-                    26400/-

Total                                                         174240/-                    158400/-

Add: Value Added Tax @ 12.5%          3630/-                        NIL

Add: Central GST @ 12%                     NIL                            3120/-

Add: State GST @ 8%                           NIL                            2112/-

நுகர்வோரின் கடைசி விலை      177870/-                   163632/-

நுகர்வோர் விலையில் வரி பங்கு  21780/-             31632/-

வரி இல்லாத விலை                             156090/-           132000/-

ஆக இந்த உதாரணம் நமக்கு உணர்த்துவது, வரியின் மேல் வரி விதிப்பதாலும், முதலில் விதிக்கப்பட்ட வரிக்கு input credit (உள்ளீடு சரி செய்தல்)  இல்லாவிட்டாலும்,  நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்பு மிக அதிகம்.

சரி GST பற்றி ஒட்டு மொத்த பார்வை ஓன்று பார்த்துவிட்டோம். இந்த  GST யினால் எந்த எந்தத் துறை எப்படி எப்படிப் பாதிக்கப்படும் என்பதைப்பார்த்துவிடுவோம்

மாநிலங்கள் மேலான பாதிப்பு

GST ஒரு நுகர்வு வரி, தயாரிப்பு வரி அல்ல. இதனால் எந்த மாநிலத்தில் பொருள் தயாரிக்கப்படுகிறதோ அந்த மாநிலம் வரி வசூலிக்க இயலாது. எங்கே நுகரப்படுகிறதோ அந்த மாநிலத்துக்கு வருமானம் வரும். ஆக உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு இது ஒரு நஷ்டமே.

உற்பத்தி விலை குறைப்பு

வரியின் மீதான வரி இல்லாததால் நுகர்வோருக்கு விலை குறையும். உற்பத்தி விலையில் 2% குறைப்பு, தயாரிப்பாளர்களுக்கு 20% லாபம் ஈட்டிக்கொடுக்கும்.

மருத்துவத்துறை

இந்தத்துறையைப்பொருத்தவரை GST மூன்று வித நன்மைகளைத்தரும். முதலாவதாக உலக அளவில் இந்தியாவின் உற்பத்தி செலவு இந்தத்துறையில் அமெரிக்காவை விடப் பாதி என்றே கூறலாம். இது நம் நாட்டின் சம்பளச்செலவு ( labour cost ) குறைவாக இருப்பதால். ஆனால் இந்த நன்மையை வரி மேல் வரி என்று போட்டு , விலை ஏற்றம் கொண்டு வந்து, உலக மார்க்கெட்டில் நம் போட்டித்திறனை மட்டுப்படுத்தி உள்ளது. GST அமலாகப்பட்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வரும்.

அடுத்ததாக இந்தத்துறையில் ஒரு சாபக்கேடு “கிடங்குகள்”. இது வேறுமாநிலத்தில் இருக்குமானால் மாநிலம் மாற்றப்படும்போது மீண்டும் வரி வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் GST வந்தால் இந்தப்பிரச்சனையும் தீரும்.

மற்றுமொரு மிகப் பெரிய நன்மை ,CST வசூலிக்கப்படுவது நிறுத்தப்படுமேயானால்,  Credit leakage  ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும்.

கார் தொழில்( Auto  Industry )

இதிலும் பெரிய பிரச்சனை தயாரிக்கப்படும் மாநிலம் ஒன்று, விற்கப்படும் மாநிலம்  வேறு பலபல. தற்போது இது stock transfer   அல்லது Dealer களுக்கு விற்கப்பட்டோ செய்யப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் கார்கள் மீது வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் வரிச்சுமை நுகர்வோர் மீது தள்ளப்படுகிறது. GST வந்தால் இந்தப்பிரச்சனையும் தீர்க்கப்படும்.

மேலும் கார் தொழிற்சாலைகள் எந்த மாநிலம் சலுகைகள் தருகிறதோ அங்கு நிறுவப்படுகின்றன. உதிரி உற்பத்தி தொழிற்சாலைகளும் அங்கேயே தொடங்கப்படுகின்றன. ஏனென்றால் வாட் வரி அப்போது தான் ஒரு தொடரில் இருக்கும் என்பதால். ஆனால் GST வந்துவிட்டால் இந்தக்கவலை இருக்காது. இன்னும் திறமையான வழியில் செயல்படத்  தொடங்கலாம்.

லாஜிஸ்டிக்ஸ் துறை

GST இந்தத் துறையிலும் பெரிய ஏற்றத்தை உண்டு பண்ணும். தொழிற்பேட்டைகள் எந்த மாநிலத்தில் குறைந்த வரி என்று பார்க்காமல் எங்கே அமைந்தால் அதிக நன்மை என்று பார்த்து செயல் பட ஆரம்பிக்கும். கிடங்குகளை அந்த மாநிலத்தில் அமைக்கும். அதனால் அவற்றை சப்ளை செய்ய லாஜிஸ்டிக் கம்பெனி  துணையைத்தான் நாட வேண்டும்.

GSTயில் வரி விகிதம் 17-18% வரை , பொதுவாக எல்லா வகை பொருட்கள் மீதும் இருக்கும். எந்த எந்தப் பொருட்கள் மேல் தற்போது இந்த வரி சதவீதத்தை விட அதிக வரி வசூலிக்கப்பட்டு வருகிறதோ, அந்தப் பொருட்களின் விலை ,GST அமலாக்கப்பட்டால், குறையும்.

தற்போது நமக்குத்  தெரிந்தது இந்த வரி சதவீதங்கள் மட்டும்தான். ஆனால் பொருட்களுக்குக் கிடைக்கும் inputcreditடும்  கணக்கிலெடுக்கப்பட்டு உண்மையான விலை அறியப்பட்டால்தான் இந்தத் திட்டம் தான் செய்ய நினைத்ததை அடைய முடியும். ஆக, இதற்கு சில மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும்.

இருக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு ஒரு  மாதாந்திர  பட்ஜெட்டை இவ்வாறு மாற்றி அமைக்கலாம்.

1. உணவில் காய்கறிகளை  அதிகமாக்கவும் , தயாரிக்கப்பட்ட உணவுகளைக் குறைக்கவும். காய்கறிகளுக்கு வரி கிடையாது.ஆனால் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி உண்டு. ஆகையால், பாக் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைக்கலாம்.

2. வெளியில் சாப்பிடுவதைக்குறைக்கலாம். அப்படித் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், தங்கும் இடம் சேர்க்கப்பட்ட ஹோட்டல்களின் மேல் அதிகபட்ச வரி போடப்படுகிறது. அதே போல் குளிர்சாதனம் இணைக்கப்பட்டவையும் அதிக வரிக்குட்பட்டது. இவற்றைத் தவிர்த்தால் சாப்பாட்டு பில் சிறிதளவு குறையலாம்.

3. போன் பில், சினிமா டிக்கெட்டுகள் ( இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்) , வங்கிக்கட்டணங்கள் அதிகரிக்கும்.ஆகவே இவற்றை அத்யாவஸ்ய தேவைகளுக்கு வைத்துக்கொள்ளலாம்.

4. வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டர் மூலம் வாங்கப்படும் பொருட்கள் விலை ஏற்றம் கொள்ளும். ஆகவே ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதைக்  குறைக்கலாம்.

5. பிள்ளைகளின் படிப்புச்செலவில் மாற்றம் இருக்காது. ஆனால் கோச்சிங் க்ளாஸ்களுக்கான கட்டணம் அதிகரிக்கும்.

6. ரயில் கட்டணங்கள் விலை ஏற்றம். அதனால் பயணங்கள் மேற்கொள்ளும்போது கவனத்தில் கொள்ளவும். இவற்றைத்தவிரச் சமையல் எரிவாயுவின் மேல் இது வரையில் வரி விதிக்கப்பட்டதில்லை. தற்போது 5% வரிக்கு உட்பட்டு இனி,ரூ 32 வரை ஒரு சிலிண்டர் விலை ஏற்றம் அடையும். அதே போல்தான் இனி நெய் பதார்த்தங்கள் தீபாவளிக்குத்தான். காரணம் வெண்ணெய் ,நெய் மீதான வரியில் ஏற்றம்.  இந்தத் தீபாவளியும்  வாண வேடிக்கை இல்லாமல்தான். பட்டாசுகளின்மேல் முதல் முறையாக வரி அதன் விலையில் ஏற்றம் .வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. உதாரணம் சோப்பு.

இதைப்போலவே பால்,முட்டை,காய்கறிகள்,மோர்,உப்பு,பிராண்ட் செய்யப்படாத மைதா,கோதுமை,கடலை மாவு.சுத்தமான தேன், பாக் செய்யப்படாத உணவு தானியங்கள் , பனை வெல்லம், பன்னீர்  இவற்றுக்கு  0% வரி. இதை நான் இங்கே சொல்வதன் காரணம், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் இவற்றை மற்ற பொருட்களுடன் வாங்கும்போது இவற்றின் மேல் வரி போடாமல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

ஆனால், சர்க்கரை, டீ, வறுத்த காப்பிக்கொட்டை, சமையல்  எண்ணை,ரேஷன் கெரொஸின், குழந்தைகள் பால் பவுடர் இவற்றின் மீது 5% வரி என்பதால் இவற்றின் விலையிலும் ஏற்றம். ஆக, வீட்டுத் தேவைகளை வரும் மூன்று மாதங்களில் பொருட்களின் ஏற்றம் இறக்கம் பார்த்து மாற்றி அமைத்தல்   அவசியம்.

அடுத்து , நம் அலுவலகத்தேவைக்கு வருவோம். டூவீலரோ, அல்லது காரோ தற்போது அவசியப்பொருளாகிவிட்டது.ஆனாலும் பணத்தேவைக்கு ஏற்ப நாம் லீசில் எடுக்கிறோம். மாதத்தவணையில் கட்டிவிடலாம் என்று. ஆனால் வரிகுறைக்கப்பட்டதால் கார் ,ஸ்கூட்டர் விலையில் இறக்கம், தவணை  வாடகையில் வரி ஏற்றம். ஆகவே மாதத்தவணையில்  எடுத்திருந்தால் இந்தக் கூடுதல் சுமை உண்டாகும்.

முக்கியமாக வீடு வாங்குதல் பற்றி ஒரு குறிப்பு. வருமான வரி விலக்கின் காரணமாக, வீடு வாங்குவது ஒரு சேமிப்பு முறையாக மாறிவிட்டது. இதில் கவனம் கொள்ள வேண்டியது, மனையின் விலைக்கு வரி கிடையாது.

இனி பிள்ளைகள் கிரிக்கெட் மாட்ச் பார்க்கக்கேட்டால், மொபைல் போன் வாங்கிக்கொடுத்துவிடுங்கள். அவற்றின் மேல் வரி குறைப்பு, ஸ்டேடியம் சென்று பார்க்க டிக்கெட்டின் மீது 28% வரி.

ஆனால் கல்வி சேவை அனைத்திற்கும் வரி கிடையாது. ஆகவே பள்ளிச்செலவு அதிகரிக்காது. ஆனால் குழந்தைகளுக்கான மில்க் பவுடரின் மேல் வரி அதிகரித்துள்ளது. டிராயிங் நோட்புக்குகள் , பேப்பர்கள் விலை குறையக்கூடும் .

மிக முக்கியமாக நம் நிதிநிலையை மாற்றக்கூடியது, நாம் எடுத்துள்ள அனைத்து விதமான இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளுக்குமீதான காப்பீட்டுச் சந்தா அதிகரித்துள்ளது. வருமான வரி 80சி பிரிவின் கீழ் கொடுக்கப்படும் விலக்கின் நிமித்தம் பாலிசிக்கள்  அனைவராலும் எடுக்கப்படுகிறது. இந்த வரி அதிகரிப்பினால் ப்ரீமியம் ரூ800 முதல் ரூ1000 வரை அதிகரிக்கும். ஆக, அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் மாத நிதிநிலையில் துண்டு விழாதிருந்தால் , உங்கள் அம்மா சொல்லாதிருந்தால்கூட ஒரு சாக்லேட் எடுத்துக் கொண்டாடலாம். அட.. ஆமாங்க, சாக்லெட்டுகளின் மேல் வரி விகிதம்  குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவலை கொள்ளவேண்டாம். இன்சுலின் மீதான வரிகுறைப்பு . மற்ற மருந்துகளின் விலையிலும் மாற்றம் இருக்கலாம்.

இதுவரை இல்லாமல் பெட்ரோலியம்  பொருட்களின்மேல் விதிக்கப்பட்ட வரியைத் தயாரிப்பாளர்கள் கட்டப்போகும்  வரியிலிருந்து குறைத்துக்கொள்ளலாம். இதன் காரணமாக, எல்லாப் பொருட்களுமே விலை குறைய வேண்டும். இது நடக்குமா…? திட்டத்தைக் கொண்டுவந்த அரசாங்கம் நிர்ணயிக்கப்பட்ட விலைகளையும் தன் பார்வைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே இது சாத்தியம்.

 

ஜி‌எஸ் டியைப்  பற்றிச் சொல்லும்  ஒரு குட்டி வீடியோவும் கிடைத்தது. அதையும் கீழே உங்கள் முன் வைக்கிறோம்!

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.