சூரியகிரகணம் – 21 ஆகஸ்ட் 2017

உலக அளவில்  சூரியகிரகணங்கள் மிகவும் ஆரவாரத்தோடு வரவேற்கப்படுகின்றன.

அதுவும் முழு கிரகணம் என்றால் அதற்குக் கிடைக்கும் வரவேற்பே தனி.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வருவதால் சூரியன் பூமிக்கு, சில நிமிடங்கள் முழுவதும் தெரியாமல் போகும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி அன்று அமெரிக்காவில் பல இடங்களில் முழு கிரகணம் தெரிய வந்தது.

 இந்த நுற்றாண்டில்  வட அமெரிக்காவில்  நிகழ்ந்த , நிகழப் போகும் சூரியகிரணங்களைப்  பற்றிய படம் இது. 

 

Image result for solar eclipse map world

 

TSE2017 Aug 21 Eclipse

அமெரிக்காவில் உள்ள மெட்ராஸ் என்ற இடத்தில் முழு சூரியகிரகணம் நன்றாகத்தெரியும் என்று அறிவித்ததால் அங்கு ஏகப்பட்ட கூட்டம்.

காலையில் சாதாரணமாக சூரியன் உதயமாகி பின்னர் 9 மணி அளவில் சூரியனின் வட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கடிக்கப்பட்ட ஆப்பிள்போல மாறி, பிறையைப் போல மாறி, முடிவில் 10.19 மணிக்கு  கும்மிருட்டாக மாறுவதே முழு சூரிய கிரகணம். அப்போது மற்ற கிரகங்கள் தெரியும். நட்சத்திரங்கள் தெரியும். பறவைகள் இருட்டாகி  விட்டதோ என்று மயங்கும். மிருகங்கள் விஷயம் புரியாமல் கூக்குரலிடும்.

இந்த முழு ‘கண்ணடைப்பு’ நாடகம் சுமார் 2 நிமிடம் 2 வினாடி வரை நீடித்தது.

அங்கு எடுத்த வீடியோவைப் பாருங்கள்!

இயற்கையின் அற்புத விளையாட்டு உங்கள் மனத்தைக் குதூகலிக்கச் செய்யும்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.