அமெரிக்காவின் ஒரு மாநிலத்திற்குப் பெயர் ” வருக வருக” (ALOHA) ! அந்த அழகுப் பிரதேசம் எது தெரியுமா?
ஹவாய்!!!
ஹவாய் என்பது வட அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு நடுவே பசுபிக் கடலில் உள்ள தீவுகளின் கூட்டம். ஹவாய் அமெரிக்காவின் 50வது மாநிலமாக 1959ம் ஆண்டு இணைக்கப்பட்டது. ஹவாய் என்பது 7 பெரிய தீவுகளையும், நூற்றுக்கும் அதிகமான குறுந்தீவுகளையும் கொண்டுள்ளது.
அந்த ஹவாய்த் தீவுகளில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் அருமையான நீலநிறக் கடலும், மிதமான வெப்பநிலை கொண்ட தண்ணீரும், பல்வேறு கடல் விளையாட்டுகளும் , கண்ணுக்குக் குளிர்ச்சியான பசுமையான காடுகளும் நிறைந்து உள்ளன !
அதில் உள்ள அழகான தீவுகளில் ஒன்று கௌவாய்!
இங்குதான் இருக்கிறது ” இறைவன் கோவில்” என்று அழைக்கப்படும் தமிழ் சிவாலயம். கோவில் சன்னதியில் தேவாரத்தின் ஒலி கேட்கும். சிவ ஆகமப்படி பூசையும் சடங்குகளும் தினந்தோறும் நடைபெறுகிறது.
அதனை மேற்பார்வை செய்ய குருமார்கள் இருக்கின்றனர். அங்கு HINDUISM TODAY என்ற காலாண்டு இதழ் பதிப்பிக்கப்படுகிறது.
(http://www.himalayanacademy.com)
அந்தக் கோவில் இன்னும் முழுமைபெறவில்லை. அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.
அதன் எழில்மிகு தோற்றத்தைக் காணுங்கள்