கங்குல் வரவு ! – தில்லைவேந்தன்

Image result for இயற்கைக் காட்சி ஓவியங்கள்

மேய்வதற்குச் சென்றிருந்த கறவை – இரை
வேண்டுமட்டும் சேகரித்த பறவை – கதிர்
ஓய்வதற்குள் வீடடைய, ஒல்லெனவே போயதற்குள்
ஒடுங்கும் – உள்ளே – இடுங்கும் !

காய்வதனால் இவ்வுலகை அளிப்பான் – வெய்யோன்
கத்துகடல் மூழ்கியுடல் குளிப்பான் – கீழே
பாய்வதனால் வெப்பமது பட்டெனவே சட்டெனவே
பறக்கும் – குளிர் – பிறக்கும் !

செஞ்சுடரை எங்கெங்கும் தேடி – வானில்
சீர்விழிகள் தோன்றுமொரு கோடி – அவை
துஞ்சலின்றித் தேடமதி தூவிளக்காய் நல்லொளியைத்
தூவும் – வந்து – மேவும் !

கொஞ்சமல்ல வெண்ணிலவின் பெருமை – அதைக்
கூறிடவே சொற்கிடைத்தல் அருமை – நம்
நெஞ்சையள்ளும் கங்குலதன் நேரிலாஇக் காட்சியின்பம்
நிலைக்கும் – துன்பம் – தொலைக்கும் !

மங்கையர்கள் தீபவொளி ஏற்றி – மால்
மருகனவன் ஒண்புகழைப் போற்றி – நிறை
கொங்குமலர் சூடிடுவார் கூந்தலிலே, எங்கும் மணம்
கொழிக்கும் – உவகை – செழிக்கும் !

தங்கணவர் வரவைஎதிர் பார்த்தே – எழில்
சாளரத்தை நோக்கிவிழி சேர்த்தே – அவர்
அங்கிங்கும் அலைந்திடுவார், அணிமணிகள் மிலைந்திடுவார்
அசைந்து – நெஞ்சம் – இசைந்து !

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.