கலீஜு’ன்ற பூனை – சென்னைச் செந்தமிழாக்கம் மட்டும் – சுரேஷ் சீனு

Related image

தோ தெரீது பார்..அந்த அபார்ட்டுமெண்டு பில்டிங்கி.. அது உள்றதான் ‘கலீஜு’ன்ற பூனை ஒண்ணு குடியிருந்துச்சு..

பேருக்கு ஏத்தாமேறியே பாக்கறதுக்கு அது ’கலீஜா, கண்றாவியா இர்க்கும். கலீஜுக்கு 3 விசியம் மெயினா புடிக்கும்.. அன்பு காட்றது, வம்பு வலிக்கறது, அப்பால எந்த கஸ்மாலத்தை வோண்ணா துன்றது. இந்த மூணையுமே காம்பினேசனா வச்சி லோல்பட்டு வாய்ந்த அத்தோட வாய்க்கையே அத்த “கலாஸ்” ஆக்கிட்ச்சி!

Related image

கலீஜப் பத்தின டீட்டயிலுல பர்ஸ்ட்டு – கலீஜுக்கு ஒரே ஒரு கண்ணுதான். மத்தது நொள்ளை! கண்ணுகுற எட்த்துல வெறும் தொண்டிதான் இருந்துச்சு! அந்த நொள்ளைக் கண்ணு சைட்லருந்த காதும் காலி. கலீஜோட பீச்சாங்காலு எப்பயோ ஒட்ஞ்சுபூட.. அது குணமாவசொலொ கால் எலும்பு எப்டியெப்டியோ வளைஞ்சிகினு ஒரு குன்ஸா செட்டாயிட்ச்சி போல. அத்தொட்டு நம்ம கலீஜு இஷ்டெய்ட்டா நின்னுருக்கப்பகூட அது ஒருமேறி திரும்பி நிக்குறாப்லயே தெரியும்..

அதும் வாலு இருந்த மொனைல ரவையூண்டு எலும்பு சதை மட்டும் தொங்கினுருக்கும்! அது, நம்ம ’கலீஜீ’ குஜாலாவசொலொவும், மெர்ஸலாவ சொலொவும், அதும்இஸ்டத்துக்கு ஒவ்வொரு சைடுகா தொகிறினே கெடக்கும்! கலீஜோட தலை, கயுத்து தோளாப் பட்டைல்லாம் லைட்டு கலரு. மத்தபடி ஒடம்புல்லாம் சாம்பல் நெறத்துல கோராமையா இருக்கும்!

அத்த யாரு எப்ப பார்த்தாலும் “ உவ்வே! கலீஜாகுதே இந்த கண்றாவிப் பூனை!” அன்டுதான் வெறுப்பா சொல்லுவானுங்கோ. அபார்ட்டுமெண்டுல இருந்த சின்னப்பசங்க கலீஜை தொடக்கூடாதுன்னு கண்டீஸன்கூடர்ந்துச்சு! வெடலை பசங்க கல்ல உட்டு எறிவானுங்கோ! லப்பரு பைப்புல தண்ணிய கலீஜும்மேல பீச்சி வெள்ளாடுவானுங்கோ! இல்ல வேற எதுனா நோண்டிகினே இருப்பானுங்கோ.. தப்பித் தவறி யாரு ஊட்டுக்குள்ளன்னாச்சும் அது பூரப் பாத்துச்சின்னா.. அதும் மூஞ்சுலயே கதவை அடிச்சு சாத்துவானுங்கோ.. அத்தினிநல்லவுங்கோ!

ஆனா இதுக்கெல்லாம் கலீஜி காட்றது ஒரே மேறியான ரியாக்ஸனு தான்!

தண்ணீய பீச்சி அட்ச்சேன்னு வையேன்.. நீ டயர்டாவுற வரீக்கும் அசையாத காட்டிகினு தொப்பலா நனைஞ்சினு கெடக்கும். நீ எதுனா பொருளெட்த்து அதும்மேல கடாசினின்னாலும் கூட, கலீஜு உன் காலாண்ட ஒர்ஸிகினே ’ஸாரிபா’ அன்ற மேறி பாவமா பாக்கும்! எப்பன்னாச்சும் அந்தப் பசங்க வெள்ளாட்றதப் பாத்தா, சந்தோஸத்துல மியாவ்னு கத்திகினே ஓடி வந்து அவங்க மேல மோதி வெள்ளாடும்..அவுங்க கிட்ட அன்பை எஸ்பெக்ட் பண்ணி சுத்தி சுத்தி வரும். அத்த தொட்டு கைல எட்திட்டே.. அவ்ளவ் தான்.. உன் சட்டையை புடிச்சு இயுக்கும், உன் காதுல மூஞ்சுல.. எது கெடைக்குதோ அதை பாசமா நக்கினேருக்கும்!

இது இப்டியிருக்கசொலொ, ஒரு நாளு கலீஜு குஜாலாகி அதும் பீலிங்க பக்கத்து காம்பவுண்ட்லகுற பணக்காரா வூட்டு நாய்ங்களாண்ட காட்டப் போக, அத்தப் புரிஞ்சிக்காத அதுங்க கலீஜு மேல கும்பலா உயுந்து கண்டபடி கடிச்சு கண்ட்மாக்கிடிச்சுங்கொ!

அந்த சத்தத்தை கேட்டு நானு ஓட்னேன். ஆனா நான் போவுறதுள்ள மேட்டரு அல்மோஸ்ட்டு முட்ஞ்சு போச்சு. கலீஜீ பர்தாபமா தரைல கெடந்துச்சு, ப்ச்! அதும் டைம் ஒவராவ போவுதுன்னு என் மன்ஸுக்குப் பட்டுச்சு

ஈரத்துல கெடந்த கலீஜுக்கு பின்னாலகுற காலுங்க ரெண்டு மட்டுல்லாத அதும் இடுப்புங்கூட ஒடிஞ்சு போயி முறுக்கிகினும், அதும் ஒடம்புலியே வெள்ளயா குற வவுறு நடுவுல நாய்ங்க கொதறி வச்சதால ரத்தம் வந்துனுருந்துச்சு.

செரி.. கலீஜை வூட்டுக்குள்ற எத்துனுபோலான்ற நெனப்போட மொள்ளொ அத்தக் கைல தூக்குனேன். அது அத்தோட வேதனைய தாஸ்தியாக்கிருச்சு போல.. ஒரே இஸுப்பா இஸ்துகுனு மூச்சு வுட கஸ்ட்டப்பட்டுப் பொழைக்கற்துக்காவ போராடுச்சு பாவம்! இத்தக் கைல எடுத்து அதுக்கும் இன்னும் ட்ரபிள் குட்த்துட்டதா எனுக்கு ஒரு பீலிங்கி..

அப்பதான் நான் எதிர்பார்க்காத ஒண்ணு நடந்துச்சு..

அந்தக் கஸ்ட்டமான டயத்துலயும், நோவோட வேதனை வாட்றப்பவும் கலீஜீ என் காதை நக்கினுருந்துச்சு.. எனுக்கு என் ஒடம்பு முடில்லாம் எந்திரிச்சு நின்னுட்ச்சி.. இன்னாமேறியான ஜீவன் இது? நீ துப்புனாலும் ஒதுக்குனாலும் தூக்குனாலும் கொஞ்சுனாலும் ரிடர்னா அன்பை மட்டும் தர்றா மேறியான எப்டியாப்பட்ட டிஜைன் இது? என் கண்ணுல தானா தண்ணி கொட்னுருந்துச்சு..

அத்த என் மூஞ்சாண்ட க்ளோஸா வச்சுகுனேன். என் கைல அதும் தலையால மோதி வெள்ளாட பாத்துச்சு. அப்டியே திரும்பி அத்தோட ஒரே கண்ணால என்ன ஒரு பார்வை பாத்துச்சு பாரு.. என் மன்ஸ அப்டியே பெசஞ்சிருச்சி ..

அந்த செக்கண்டு.. எனக்கு கலீஜு தான் ஒலகத்துலயே அயகான, அன்பான ஒரு உசுரா தெரிஞ்சுது. கலீஜோட பார்வை என்னாண்ட அது வெறும் பாசத்தையும், கரிசனத்தையும் மட்டுந்தான் தேடுச்சுன்னு எனுக்கு பட்டுச்சு. மொள்ள அதும் இஸுப்பு வேற மேறி மாறுச்சு. நோவு தாஸ்தியாயிடுச்சாங்காட்டி.. அப்பங் கூட என்னை அது கடிக்கவோ ப்ராண்டவோ டிரை பண்ணல..என்னைய உட்டு போவனும்னு கூட பாக்கல.. நக்க தான் ட்ரை பண்ணுச்சு. நான் இன்னாமோ அதுங்கஸ்ட்டத்த கம்ப்ளீட்டா தீத்துருவேன்னு நம்புறாப்ல என்னப் பாத்துனேருந்துச்சு.

பாத்துனுருகசொலொவே ..கலிஜு.. செத்துப் பூட்ச்சு!!. வூட்டுள்ற எத்தும்போறதுக்குள்ள என்.. கைலியே செத்துப்பூட்ச்சு.. இன்னா பண்றதுண்டு தெர்ல.. அத்த கைல வச்சுகுனே அப்டியே குந்திகுனேன்.. ரொம்ப நேரம் அப்டியேருந்தேன்.

ஒடம்பு பின்னமா, அசிங்கம்.. கலீஜுன்னு நாம நெனச்சினுருந்த ஒரு சின்ன உசுரு எனுக்கு லைஃப்னா இன்னா.. அத்தோட வேல்யூ இன்னா.. பாசத்தோட பவரு இன்னான்னு புரிய வச்சிட்சி.

நூத்துக்கணக்குல புஸ்தவம் படிச்சு, பெர்ய மன்ஸாள் பேசுற பேச்சுங்க, நாலு மன்ஸாளோட பயகி வர்ற எஸ்பீரியன்ஸு, அறிவு இதெல்லாத்தையும் வுட மத்த உசுருங்க கிட்ட அன்பு காட்றதும், கரிசனமா இருக்கற்தும் எத்தினி ஒஸ்தி அண்டு கலீஜு எனுக்கு கத்துக் குட்த்துட்டுப் பூட்ச்சு.

அது ஒடம்பு கலீஜா இருந்துச்சு.. ஆனா கொஞ்ச நேரம் முந்தி வரை என் மன்ஸு அத்தவுட கலீஜா இருந்துச்சு. எனுக்கு வாஜ்ஜாரா மாறுன கலீஜுக்கு வணுக்கம்.. இன்னும் அன்பைப் பத்தி பாசத்தப் பத்தி முயுசா கத்துக்கணும் நான். அதுக்கு டயம் வந்துர்ச்சு

பொதுவா அல்லாருமே பணக்காரவுங்களா, ஃபேமஸானவுங்களா, அழகானவங்களா, அல்லாருக்கும் புட்ச்சவங்களா வாழதான் ட்ரை பண்ணுவாங்கோ. ஆனா இனிதொட்டு நான் கலீஜு மாறி ஆவனும்னிட்டு தான் ட்ரை பண்ணுவேன்.

இந்தக்கதையை யார் எய்தினது, மெய்யாலும் நடந்துச்சா இல்லியா.. தெர்யாது. ஆனா வாய்க்கைக்கு தேவையான மேட்டரை என்னுள்ற செதுக்கி வச்சுட்ச்சி..

உருவம் கோராமையா இருந்தாலும் உள்ளத்தப் பாரு. அன்பைக் காட்டு! நல்லாருப்பே! அன்றதுதான் அந்த லெஸனு.

#அன்பே சிவம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.