அலைகள் நிற்கட்டுமென்று நீயும்
காற்று நிற்கட்டுமேயென்று நானும்
காதலைச் சொல்ல காத்து நின்றோம்
ஒரு கட்டுப்பாட்டுடன்
ஒருவரை ஒருவர் பார்த்தால் கூட
நிலை தடுமாறுமென
தயங்கி நின்றோம் சிலநிமிடம்
கடலலை கால்களைத் தழுவிச் சென்றது
குறுகுறுவென மனதில் பதட்டம்
நம்கை நழுவிப் போய்விடுமோ
பயம் கொஞ்சம் பதட்டம் கொஞ்சம்
நேரம் கடந்ததுதான் மிச்சம்
மளுக்கென்ற உன் சிரிப்பிலே
கட்டுப்பாடு தளர்ந்து
காதல் வயப்பட்டோமே நாம்!!!