சிலப்பதிகாரம் ஏன் எழுதினேன் என்று இளங்கோ அடிகளே கூறும் மூன்று காரணங்கள் உண்டு.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
இதில் ஊழ்வினையைப்பற்றியும், பத்தினியைப்பற்றியும் இங்கு நாம் பேசப்போவதில்லை.
ஆனால் அரசியலில் தவறு செய்பவர்களுக்குத் தரும தேவதையே வந்து தண்டிக்கும் என்ற வாதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம்.
இது இன்றைக்குச் சரியா?
2ஜி வழக்கில் அனைவருக்கும் விடுதலை என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !
ஆர் கே நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டார் என்றதும் எழுகின்ற கேள்விதான் இது !
“முருகா உன்னைப் புரிஞ்சுக்கவே முடியலை! சுப்பிரமணிய சாமியா வந்து கேசைப் போட்டே ! குமாரசாமியா வந்து கேசே இல்லை என்றாயே” என்பவர்கள் கேட்கும் கேள்வி இது !
தலைமை நீதிபதியே சரியில்லை என்று மற்ற நீதிபதிகள் வெளிப்படையாகப் பேசும்போது மக்கள் மனதில் தோன்றும் கேள்வி இது !
“நீதி வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கியதைப் போலத் தோன்றவும் வேண்டும்” என்று சொல்கிறவர்கள் கேட்கும் கேள்வி இது!
‘ஊழல் இந்திய மக்களின் மத்தியில் புரையோடிக்கிடக்கும் புற்று நோய். அதற்கு மருந்தே கிடையாது’ என்று வெளிநாட்டவர் கூறுவதைக் கேட்டு வேதனைப்படுபவர் கேட்கும் கேள்வி இது !
குறித்துக் கொள்ளுங்கள்!
ஊழல் செய்தவன் கண்டிப்பாகத் தண்டனை அடைவான் என்ற எண்ணம் என்றைக்குத் தோன்றுகிறதோ அன்றுதான் நம் நாடு உலக அளவில் மாபெரும் வல்லரசாக மாறும் !
இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது நம்நாடு வல்லரசாக மாறும்.
அந்த நம்பிக்கை இருக்கிறது.
Vachanam:Muzhu poosanikkaaya chottula Marseilles mudiyumaa
Indru vachanam: yaen saar muzhu
Poosanikkaaya chottula maraikka mudiyadhu. Nichchyamaa mudiyum.
Nayavanjaga vazhakkarignargal ellaam tsunami purivaargal. Mandai makkal koottam thaanae.
Maelae theriginra chottraip paarthu aaravaaram cheivaargal.
Poosaniyavadhu mannavadhu
LikeLike