எமது நெடுநாள் கனவு ஒன்று நனவாகியது!
இணையாசிரியர் கிருபாநந்தன் அவர்களின் கருணையால்!
“குவிகம் இலக்கிய இல்லம்”
சென்னை தி நகர் தணிகாசலம் சாலையில் சில்வர் பார்க் என்ற குடியிருப்பில் மூன்றாவது தளத்தில் ஆறாம் இலக்கம் கொண்ட இல்லத்தில் பிப்ரவ்ரி 11 ஞாயிறு அன்று துவக்கப்பட்டது.
வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் ஏராளம்!
இதன் நோக்கம் செயல்பாடுகள் குறித்து நாங்கள் தயாரித்த வெள்ளை அறிக்கையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு: (உங்கள் கருத்துக்களை வரவேற்கிறோம்)
குவிகம் மின்னிதழைத் தொடர்ந்து அதன் இணை அமைப்பான குவிகம் இலக்கிய வாசல் மூலம் கடந்த மூன்றாண்டுகளாக மாதந்தோறும் இலக்கியக் கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாகக் குவிகம் பதிப்பகம் என்ற அமைப்பை ஆரம்பித்து புத்தகங்கள் வெளியிட்டு வருகிறோம்.
தற்போது, ‘குவிகம் இலக்கிய இல்லம்’ என ஒரு புதிய முயற்சியை வரும் பிப்ரவரி 11, (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணிக்கு சென்னை தியாகராய நகரில் ஒரு குடியிருப்பில் இந்த அமைப்பினைக் கீழ்க்கண்ட சேவைகளுடன் தொடங்குகிறோம்
· கதை, கவிதை, . நாடகம் மற்றும் கட்டுரைகள் வாசிக்கும் நிகழ்வுகள்
· புத்தகங்கள், மின்புத்தகங்கள் வெளியிட உதவி
· புத்தகங்கள் படிக்க நூலகம் (Reference Books only)
· 20% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை
· தாங்களே கொண்டுவரும் புத்தகங்களைப் படிக்க வசதியான சூழ்நிலை
· தங்கள் மடிக்கணினியில் மின்புத்தகங்கள் வாசித்தல்
· புத்தகங்கள் பரிமாற்றம் (BookXchange)
· படைப்பாளிகள் சந்திப்பு
· கிண்டில்/ மடிக்கணினிகள்/அலைபேசி மூலம் அமேசான் மின்புத்தகங்கள் வாசிக்க ஏற்பாடு
( கூடிய விரைவில்)
· புத்தக வெளியீட்டு விழாக்கள்
எண்ணத்தில் உள்ள பிற செயல்பாடுகள்
· இலக்கிய விவாதம்
· பட்டி மன்றம் / வழக்காடு மன்றம்
· கதை /கவிதை சொல்லல்
· குறும்படங்கள் /ஆவணப்படங்கள் திரையிடல்
· புத்தக விமர்சனம்
· சிறந்த சிறுகதைகள் /நாவல் தேர்ந்தெடுத்தல்
· இலக்கியச் சந்திப்புகள்
· பள்ளி மாணவர்களுக்கு இலக்கியப் பயிற்சி
· புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல்
இதில் லாபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிக நஷ்டமில்லாமல் குவிகம் இல்லத்தைத் தொடர்ந்து நடத்த என்னென்ன செய்யலாம் என்பதைப்பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்! ( Mail to: ilakkiyavaasal@gmail.com or editor@kuvikam.com)