ஆண்டாள் – வைரமுத்து
தமிழ்த்தாய் – விஜயேந்திரர்
வெறும் வாயை மெல்லும் முகநூல் நண்பர்களுக்கு இதெல்லாம்
வெல்லம் போட்ட அவல்.
யார் எப்பொழுது எங்கே இடறி விழுகிறார்கள் என்று பார்த்து அவர்மீது
சேற்றை வாரி இறைக்கத் தயாராய் இருக்கும் இன்னொரு கூட்டம்.
பத்மாவத் திரைப்படம் ரஜபுத்திரர்களுக்கு மன உணர்வைத் துன்புறுத்துகிறது.
மெர்சல் படத்தில் ஜி எஸ் டி யைப்பற்றிப் பேசியது ஆளும் கட்சிக்குப் பொறுக்கவில்லை.
விஸ்வரூபம் முஸ்லிம் சகோதரர்கள் உணர்வைப் பாதிக்கிறது.
கமலஹாசன் வாயைத் திறந்தாலே அது முத்தத்திலோ சர்ச்கையிலோதான் முடியும்.
இலக்கியத்தில் பெருமாள் முருகன் மதத்தை அவமதித்து விட்டார்
நாட்டுபுறப்பாடல்கள் பாடிய கோவன் கைதுசெய்யப்பட்டார்
சமீபத்தில் கண்ணடித்த நடிகை நடித்த படத்தின் பாடல் வரிகள் ஒரு இனத்தை அவமதிக்கிறது
ஜல்லிக்கட்டின் தடை தமிழ் உணர்வை அவமதிக்கிறது.
பெண்களைப்பற்றி ஒரு கருத்து சொன்னால் பெண்ணீயத்துக்கு எதிரி!
தலித் நண்பர்களைப் பற்றி தவறான கருத்து சொல்வது சட்ட விரோதம்
டாக்டர் பற்றிஜோக் எழுதினால் அவர் வியாதிக்கு மருந்தே கிடையாது
அரசியல்வாதியைப்பற்றிப் பேசினால் தேசத்துரோக வழக்கு
நீதி மன்ற நிகழ்வுகளைப்பற்றிப் பேசவே கூடாது!
இவை அனைத்தும் நமக்கு மற்றவர் மீது இருக்கும் அவநம்பிக்கையையே காட்டுகிறது!
நாம் ஏன் இவை எல்லாவற்றையும் கடந்து நிற்கக்கூடாது?
” நீ உன் குடைத் தடியைச் சுற்றும் உரிமை என் மூக்கு நுனியுடன் முடிந்து விடுகிறது “
( Your liberty stops where my nose starts) என்று சொல்வார்களே அது மாதிரி இருப்போம்.
குடைத்தடியைச் சுற்றுபவரும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூக்குள்ள நபர்களும்
அதற்காக மூக்கை நீட்டவும் வேண்டாம்.
குறிப்பாக எல்லாவற்றிற்கும் கொம்பு சீவும் பழக்கத்தைக் கைவிடவேண்டும்!
மனித நேயம் வளர அது ஒன்று போதும் !