புராதன தராதலம் உலாவிடும் தீநெறிகள் போயழிக்க சேவல்வருமே
இராதினி தகாதவை , பளீரென வேயுருவும் ஏறுமயில் வீரன்படையால்
மராமரம் எலாமவை ஒரேயொரு கூர்கணையால் மாய்த்தவனின் சீர்கொள்மருகா !
தராதவை , வராதவை , பெறாதவை ஏதுமிலை தாளிணையைச் சேருமவர்க்கே .
குறிப்பு:
இச்சந்த விருத்தத்தின் ஒவ்வொரு அடியிலும் மெய்யெழுத்து நீங்கலாக 25 எழுத்துக்கள் உள்ளன.