இரகசியங்கள் சொல்வதற்கு அல்ல -ஈஸ்வர்

    

Related image

மேனனுக்கு மூச்சு நின்று விடும்போலிருந்ததது. ரமேஷ் கணிப்பொறியில் வந்த  அந்தப் பெயரை மறுபடியும் படித்தான்..

“ஆர் யு ஷ்யூர் , ரமேஷ் ?” –மறுபடியும் வினவினார் மேனன்.

ஆமாம் சார்!   இந்தப்பேர்தான் வருது.”

“மிஸ்டர் ரமேஷ்!  இந்த லிஸ்டை எந்தெந்த மாதம் எடுத்திருக்கான்னு பார்த்துச் சொல்லமுடியுமா?”

ரமேஷ்,  இன்னும் கொஞ்ச நேரம் விரல்களால் மேனன் மேஜையில் இருக்கும் கம்ப்யூட்டரிடம் பேசினான்.

“சார்!  கடந்த ஒரு வருஷமா இந்த லிஸ்ட் எடுக்கப்பட்டிருந்தாலும் இதை பிரிண்ட் அவுட் மூலமா எடுக்கலை. ப்ளாப்பிலதான் மாதா மாதம் வெளியிலேர்ந்து ஏத்தியிருக்காங்க.”

“அப்படின்னா ? ”

“இந்த விவரங்களை அப்படியே வெளில, அதாவது, பாங்கிங் ஹால்லயே இருக்குற பர்சனல் கம்ப்யூட்டர் உதவியோட , உள்ளே பிளாப்பி டிஸ்குல அப்படியே பதிவு பண்ணிக்கிறது. அப்படி எடுக்கப்பட்டிருக்கு.”

மணி உடனடியாகக் கேட்டார்.

“மிஸ்டர் ரமேஷ்!  இது போல கம்ப்யூட்டர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும்ங்கறது, உங்க கண்ட்ரோல்  ரூமைத்தவிர வெளில இருக்குற ஸ்டாஃபுங்களுக்குத் தெரியுமா?”

ரமேஷ் கொஞ்சம் தயங்கினான்.

“சொல்லுங்க, மிஸ்டர் ரமேஷ்.”.

“எங்க சீனியர் மேனேஜர் மிஸ்டர் மேனனுக்கே இப்பத்தான் தெரியும்னா  பார்த்துக்குங்களேன்.  கம்ப்யூட்டர் சிஸ்டத்தைக் கண்ட்ரோல் செய்யிறவங்க அப்படிங்கற முறையில நாங்கதான்  எல்லாத்துக்கும் ரெஸ்பான்ஸிபில்.  அதனால அக்கவுன்ட்டபிலிடியும் எங்களுக்குத்தான்.  ஸோ, சிஸ்டத்தோட  ஃபுல்  ஃபங்ஷனைப்பத்தி நாங்க வெளில பேசறதில்ல.”

“ஓகே மிஸ்டர் ரமேஷ்!   தாங்க்யூ  ஃபார் தி இன்பர்மேஷன்.  பட்,  இனிமேதான் உங்க  ரெஸ்பான்ஸிபிலிடி கூடறது.  எங்களுக்கு இது ஒரு இம்பார்டன்ட் எவிடன்ஸ்.  இது கோர்ட்டுக்கும்கூடத் தேவைப்படும். அதனாலே எவிடன்ஸ் அழிஞ்சிடக்கூடாது.  மிஸ்டர் மேனன்! அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை இனிமே நீங்கதான் செய்யணும். ஓகே. இப்போ அந்த கம்ப்யுட்டர்ல  வந்த அந்தப் பேரு என்ன?  ம்.. ரமணன். அவனை நாங்க உடனடியா பார்த்தாகணுமே?”

“ரொம்ப நல்ல பையன் சார்!. அவன் ஏன் இது மாதிரி ஒரு காரியத்துல ஈடுபட்டான்னு புரியலை”

“ கவலைப் படாதீங்க… கண்டுபிடிச்சிடுவோம்…”

“ காலமே சீக்கிரமே வந்துடுவான். சாயங்காலம்கூட லேட்டா உட்காரணும்னா முணுமுணுக்கவே மாட்டான். ..சின்சியர்  பாய். .. கொஞ்சம் கஷ்டப்படற  ஃபேமலி வேற.!.”

“சரி.. அந்தப் பையனைக் கொஞ்சம் கூப்பிடுங்க சார்..”,  மல்ஹோத்ரா அதிலேயே குறியாக இருந்தார்.

“டி.எஸ்.பி. சார்… அவங்க அப்பா இன்ட்டன்சிவ்கேர் யூனிட்ல அட்மிட் ஆகி இருக்கார்னு தந்தி வந்தது.  மெட்ராசுக்கு ப்ளைட்டுல போயிருக்கான் சார்..”

மணியும், மல்ஹோத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“மிஸ்டர் மேனன்.. அவனுடைய லோக்கல் அட்ரஸ், மெட்ராஸ் அட்ரஸ் ரெண்டும் உடனடியா எங்களுக்கு வேணும்..”

“சார், நான் அப்சர்வ் செஞ்ச சில விஷயங்களை இப்போ சொல்றேன். ஆனா எந்த அளவுக்கு அது உங்களுக்குப் பயன்படும்னு தெரியாது..”

“ சொல்லுங்க மிஸ்டர் ரமேஷ்..”

Related image

“ரமணன் நல்ல பையன்னு சார் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்.. ப்ரில்லியன்ட்டுகூட… ஆனா.., அவன் போக்குல கொஞ்ச நாளா சில மாற்றங்கள் இருந்தது.  ஒரு ஆறு, ஏழு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் அவன் இருபத்தி அஞ்சு ஆயிரம் ரூபா அவங்க அப்பா பேர்ல டிராஃப்ட்டா, இந்த ப்ராஞ்சுலேர்ந்து  வாங்கி அனுப்பினான்.  என்ன ரமணா! ஏதாவது லோன் போட்டியான்னு கேட்டேன்.. சிரிச்சுக்கிட்டே ஒண்ணும் சொல்லாம போயிட்டான். ரமணன் எந்த லோனும் பாங்குல அப்ளை பண்ணலேன்னாங்க.  அதுக்கப்புறம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு எங்க பிராஞ்சு மூலமா இல்லாம, எங்க பாங்கோட,  இதே மும்பைல இருக்குற இன்னொரு கிளை மூலமா ஒரு இருபத்தி அஞ்சாயிரம் ட்ராப்ட்டு அவன் சிஸ்டர் பேர்ல எடுத்து அனுப்பினது தற்செயலா தெரியவந்தது. மும்பைல தனியா இருந்துகிட்டு ஊர்ல இருக்குற குடும்பத்துக்குப் பணம் அனுப்பறது எவ்வளவு கஷ்ட்டமா இருக்குன்னு எங்கிட்ட மொதல்ல பொலம்பிக்கிட்டு இருந்தான் . ஆனா பணப் புழக்கம் வர ஆரம்பிச்சவுடனே ஒதுங்க ஆரம்பிச்சுட்டான். . பக்கத்துல இருக்குற கூரியர் ஆபீசுக்கும் அடிக்கடி போய்வந்துகிட்டிருநதான்…”

“இது, ஒரு முக்கியமான க்ளூவா  இருக்கலாம்.  தேங்க் யூ.”

‘இன்னும் சிறிது நேர விசாரணைக்குப் பிறகு, சிவாஜி ராவ் உள்ளே வந்தான்.

(சஸ்பென்ஸ் தொடரும் )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.