நீலக்குறிஞ்சி -ஜெய் சீதாராமன்

Image result for couple working in IT in Bangalore talking over skype

ஷகீலா ப்ராஜெக்ட் ப்ராக்ரஸ் மேனேஜ்மெண்ட் மீட்டிங் முடிந்து அவளுடைய கேபினுக்குள்   நுழைந்தாள். ப்ராஜெக்ட் திட்டவட்டமாகக் கால வரையறைக்குள் முடிக்கத் தீர்மானம் ஆகியது. நீட்சிக்குக் கொஞ்சமும் இடமில்லை. ப்ராஜெக்ட் லைவ் டெஸ்டிங்க் ஸக்ஸஸ்ஃபுல்லாக முடிவடையும் தறுவாயில் ஆனந்தி எழுதிய ரொடீனில் ஒரு பெரிய பக்.  இப்போது பார்த்து புரோக்ராம் டீமிலிலிருந்து ஆனந்தி ரிஸைன் செய்து விட்டாள். அதன் விளைவு என்ன? போர்டில் வரையப்பட்டிருந்த ‘குறிக்கோள் தீவிர பாதை ஆய்வு’ படத்தில் அந்த புரோக்ராமின் முக்கியத்தை ஆராய்ந்தபோது  அந்த புரோக்ராம் டெவலப் ஆகும் அதே  சமயத்தில் டீமின் மற்ற அத்துணை பேரும் வெவ்வேறு விதத்தில் பங்கை நிறைவேற்ற நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனத் தெரியவந்தது. எனவே இந்த இழப்பைச் சரி செய்து ஈடு கட்டாவிட்டால்  டார்கெட் டைம் நீடிப்பது உறுதி. இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அந்த வேலை தொடங்கப்பட்டே ஆக வேண்டும். இல்லாவிடில் மற்ற விளைவுகளையும் சந்திக்க நேரிட்டு நமக்கு ப்ளாக் மார்க் கிடைப்பது நிச்சயம்..    வேறு ஒரு நம்பகமான நபரைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். கன்சல்டன்ஸி நபரை அமர்த்தினால் பட்ஜெட்டுக்குக் கேடு. தனி ப்ஃரீலான்ஸ் நபரைத்தான் வேலையில் சேர்க்க வேண்டும். இந்தக் குறுகிய காலத்தில் அதுவும் ஐந்தே நாட்களில் நமக்குத் தேவையான க்வாலிஃபிகேஷன் எக்ஸ்பீரியென்ஸுடன் சேர்ந்து கூடிய நபரை எப்படித் தேடுவது? வரும் நபருக்கு ஸிஸ்டம் நாலெட்ஜ், ரொடீன் நாலெட்ஜ் கொடுத்து ரெடிபண்ணி, கோடிங் டைம், டெஸ்டிங் டைம் போக லைவ் டெஸ்டிங் பண்ணி சக்ஸஸாக முடிக்க இதைவிட டைட்டான சிசுவேஷன் இருக்கமுடியாது  என்றெல்லாம் எண்ணி கவலையில் ஆழ்ந்தாள்.  ரிஸ்ட் வாட்ச்சைப் பார்த்து மணி மாலை 7 என்பதை அறிந்து பெருமூச்சுடன் ஹாண்ட்பாகிலிருந்து ஹெட்ஏக் பாமை எடுத்து இரண்டு பொட்டுகளிலும் தேய்த்துவிட்டுக்கொண்டாள்.  கார் பார்க்கை அடைந்து   காரை எடுத்து வீட்டிற்கு ட்ரைவ் பண்ணத் தொடங்கினாள்.

ஜெண்டர் இம்பாலன்ஸ் ஆகி  2010ல் எடுத்த ஸென்ஸஸ் கணக்கெடுப்பின்படி பெண்கள்-ஆண்கள் ரேஷியோ 1000 பெண்களுக்கு 1200 ஆண்களென்று மதிப்பிடப்பட்டது.  பெண்கள்  நன்றாகப் படித்துப் பட்டம் பெற்று  பெரிய பதவிகளையெல்லாம் ஏற்றுத் தங்கள் தரத்தை உயர்த்திக்கொண்டனர். கூடவே  தங்களை மணக்கப்போகும் மணாளன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்னும் அவர்களின் எதிர்பார்ப்புகளும் வெகுவாக உயர்ந்து விண்ணை எட்டியன. விளைவு,  இவர்களுக்கு ஈடு கொடுக்கும் ஆண்கள் கணிசமாக இல்லாமல் போகவே சில  பெண்களின் கல்யாண வயது தள்ளிக்கொண்டே போகத்தொடங்கியது. பெண்கள் அதைப்பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதாகத் தெரியவில்லை!

ஷகீலாவுக்கு  வசீகரமான உடல்.   ஜிம்மிற்குத் தவறாமல் சென்று கட்டுக்கோப்புடன் டிப்டாப்பாக வைத்திருந்தாள். எவரையும் கவரும் முகம். என்ன, 27 வயதில் யௌவனத்தின் சாயல் கடுகளவு குறைந்தபோதிலும் பார்த்தார் மனதில் பளிச்சென்று நிற்கும்படியான தோற்றம்! படிப்பில் அதிக ஆர்வம் காட்டி கேம்பஸ் இன்டர்வ்யூவில் தேர்வாகி, நல்ல ஐடீ வேலை கிடைத்தது. அதில் படிப்படியாக முன்னேறி இப்போது ப்ராஜெக்ட் மேனேஜராக உயர்ந்திருந்தாள். கல்யாணத்தைப்பற்றிக் கொஞ்சம்கூட மனதில் இடம் கொடுக்காது வேலையில் ஆர்வத்தைக் காட்டினாள்.

ஓயெம்மாரில் இப்போது அவள் கார் போய்க்கொண்டிருந்தது. மணி இரவு எட்டைத் தொடத் துவங்கியிருந்தது. அந்தச் சாலையில் அவள் வழக்கமாக ரிலாக்ஸ் செய்யும் ஓர் உயர்தரமான காஃபீ ரெஸ்டராண்டில் காரைச் செலுத்தி பார்க்பண்ணி உள்ளே சென்றாள்.

வழக்கமாய் அமரும் க்யூபிகுளுக்குள் நுழைந்தாள். அங்கே அவள் தோழி நிருபமா இருக்கையிலிருந்து எழுந்து ‘ஹலோ ஷகீலா’ என்று ஷேக்ஹாண்ட் பண்ணி ‘ இப்படி வந்து உட்கார்’ என்று அவளை அன்புடன் அழைத்தாள். ஷகீலாவை உன்னிப்பாகக் கவனித்த நிருபமா ‘என்ன ஷகீலா, உன்னிடம் உள்ள இயல்பான உற்சாகத்தைக் காணோம்’ என்றாள்.

‘முதலில் எனக்கு ஒரு ஸ்ட்ராங்  காஃபீ ஆர்டர் பண்ணு’.

அருகில் வந்த  வெயிட்டரிடம் நிருபமா காஃபீ ஆர்டர் பண்ணினாள். உடனே அது கொண்டுவந்து வைக்கப்பட்டது.

‘என்ன ப்ராப்ளம்? உன்னிடம் நான் இன்று திட்டவட்டமாகப் பேசி உன் கல்யாணத்திற்குச்  சம்மதம் வாங்க எண்ணியிருந்தேன். இப்படி எழிலான உன் தேகம் வேஸ்ட்டாகிக் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கம். நீ என்னடா என்றால் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறாய்’.

ஷகீலா காஃபியை அருந்திக் கொண்டே ‘அது ஒன்றுதான் இப்போது குறைச்சல். கல்யாணத்தில் எனக்குக் கொஞ்சம்கூட  நாட்டமில்லை என்பது உனக்குத்தான் தெரியுமே.  நான் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு ஆறுதல் சொல் அல்லது  தீர்க்க வழி ஏதேனுமிருந்தால் அதைக் கூறு’ என்று ப்ராப்ளத்தை விளக்கினாள். பாவம், நிருபமா என்ன செய்வாள்! அவள் லைனே வேறு. ப்ராப்ளத்தை ஸால்வ்பண்ண ஐடியா கொடுக்க முடியவில்லை ஆனால் அவளால் ஷகீலாவுக்கு ஆறுதல் மொழிகளே தர முடிந்தது.

ஷகிலா எழுந்திருந்தாள். ‘நான் என் ஃப்ளாட்டுக்குச் சென்று இன்றிரவு நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளப்போகிறேன். நாளை இதற்குத் தீர்வான விடை கிடைக்குமெனத் திடமாக நம்புகிறேன். நீ என்ன செய்யப்போவதாக இருக்கிறாய்?’ என்றாள்.

நிருபமா, ‘இல்லை. நீ செல்.  என் பாய்ஃப்ரண்ட் சிவா இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவதாக இருக்கிறார். அவரோடு சிறிது நேரம் டைம் ஸ்பெண்ட்பண்ணுவதாக இருக்கிறேன்’ என்றாள்.

அப்போது பக்கத்து க்யூபிகுள்ளிருந்து ஒரு ஆண் உருவம் வெளி வந்தது. என்ன உடல்! என்ன  அழகான முகம்! ஸ்லிம்மான 6 அடி உயரமுள்ள அந்த உருவம்  ஜிம்முக்குச் சென்று உடலை வாட்ட சாட்டமாக வைத்திருப்பதாகத் தெரிந்தது. மெதுவாக நம் நண்பர்கள் க்யூபிகுளை தாண்டிச் சென்றது. போகும்போது எழுந்து  நின்றிருந்த ஷகீலாவை  ஏறெடுத்துப் பார்த்து மனதில் அவள் உடலை அப்படியே அங்கம் அங்கமாகப் பதிய வைத்துக்கொண்டது. ஜெண்ட்ஸ் ரூமுக்குச் சென்றது போலும்!  சிறிது நேரம் கழித்து  வெளிவந்து தன் க்யூபிகுளை நோக்கித் திரும்பி வரத் தொடங்கியது. அப்போது ஷகீலாவை அங்கு காணோம்.

வீக்கெண்ட் முடிந்து திங்கள்கிழமை. காலை 10 மணிக்கு ஷகீலா ஆஃபீஸுக்குள் நுழைந்தாள். அன்று ஸ்ட்ரைக் – டோட்டல் பந்த் என்று அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது. இது என்ன சோதனை!  என் கெடு இப்போது 5 நாட்களிலிருந்து 4 நாட்களாகக் குறைந்து விட்டதே! எப்படி ஈடு செய்யப்போகிறேன்?

அப்போது அட்டெண்டெண்ட், ‘இன்று கொரியர் ஆஃபீஸெல்லாம் கூட பந்த்.  யாரோ இந்த பேக்கேஜை ஸ்பெஷல் டெலிவெரி மூலம் அனுப்பியிருக்கிறார்கள்’ என்று கூறியவாறே பேக்கேஜை மேஜையில் வைத்துவிட்டுச் சென்றான்.

அதை ஷகீலா கொஞ்சம் கூடச் சட்டைசெய்யவில்லை.  ஸாஃப்ட்வேர் ஸேல்ஸ் ப்ரமோஷன் மெடீரியலாய் இருக்கலாம் என்பது அவள் எண்ணம். கிச்சனுக்குச் சென்று காஃபீ பார் மெஷினிலிருந்து ஒரு ப்ளாக் காஃபியை எடுத்துக்கொண்டு கேபினுக்குத் திரும்பினாள். காஃபியை ஸிப் செய்துகொண்டே கொரியரில் என்னதான் வந்திருக்கும் என்று பேகேஜை ஓப்பன் பண்ணினாள்.

ஒரு கவரிங் லெட்டெர்.  சில பேப்பர்கள். கவரிங் லெட்டரைப் படிக்க ஆரம்பித்தாள்.

மிஸ் ஷகீலா என்று ப்ளைன் பேப்பரில் ஆரம்பித்திருந்தது. படிப்பதை சிறிது நிறுத்தினாள். யார் அது? ஏற்கெனவே அறிமுகமானவருடன் பேசுவதுபோல ஆரம்பித்திருக்கிறது?  கீழே ‘ரமேஷ்’ என்று கையொப்பமிட்டிருப்பதைப் பார்த்துக்கொண்டாள். மேலே தொடர்ந்தாள்.

‘ஏற்கெனவே அறிமுகமானவரிடமிருந்து வந்த லெட்டர் போல ஆரம்பித்திருக்கிறதே என்ற வினா உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்! தயவு செய்து தவறாக என்னை எடைபோட்டுவிடாதீர்கள். இந்தக் கடிதத்தைப் படித்தபின் ஒரு முடிவிற்கு வாருங்கள். என்னை உங்களுக்குத் தெரியாது.  ஆனால் நான் உங்களைப்பற்றியும் உங்கள் தற்போதைய இக்கட்டான சூழ்நிலையைப்பற்றியும் சமீபத்தில் தெரிந்துகொண்டேன். நான் ஒரு ஸாஃப்ட்வேர் டெவலப்பர். என் கீழ் 50 ஸாஃப்ட்வேர் இஞ்சினியர்ஸ் வேலை பார்க்கிறார்கள். என் ஸாஃப்ட்வேர் ப்ராடக்ட்ஸ் இந்தியா முழுவதும் உபயோகப்பட்டு வருகிறது. அதில் ஒன்று உங்களை  இப்போதைய ப்ராப்ளத்திலிருந்து நிச்சயம் ரிலீவ் பண்ணும் என்று திடமாக நம்புகிறேன். இரண்டாவது பக்கம் என் ஆர்கனைஸேஷனைப்பற்றியது. அது எங்கள் கம்பெனியைப்பற்றிய பேக்ரௌண்ட்  இன்ஃபர்மேஷன். மூன்றாவது பக்கத்தில் இந்த  ஸாஃப்ட்வேரை நீங்கள் உபயோகிக்க நான் கம்பெனி ஸீலுடன் கையொப்பமிட்ட எங்கள் ஆதரைஸேஷன் லெட்டர்.  நான்காவது பக்கத்தில்     இந்த ஸாஃப்ட்வேர் இருக்கும் வெப் சைட்டும் அதை  டௌண்ட்லோட்  செய்ய எங்கள் பாஸ்வோர்டும். ஐந்தாவது பக்கத்தில் எப்படி இந்த ஸாஃப்ட்வேரை உபயோகிப்பது என்பதற்கான விளக்கம். வெரி ஈஸி. பராமீட்டர் ட்ரிவன். ஆறாவது பக்கத்தில் என் வாட்ஸ்அப் ஹாட் லைன் நம்பர். நான் உங்களுக்கு உதவி செய்ய ஆன் காலில் காத்திருப்பேன். தயங்காமல் என்னை காண்டாக்ட் பண்ணலாம்’ இப்படிக்கு ரமேஷ்.

அப்படியே ஷகீலா இன்ப அதிர்ச்சியில் சேரில் சாய்ந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை. அவருக்கு எப்படி என்னைப்பற்றியும் என் சூழ்நிலையைப்பற்றியும் தெரிந்தது? எனக்கு ஹெல்ப்பண்ண அவருக்கு ஏன் தோன்றியது? இதைப்பற்றியெல்லாம் இப்போது ஆராய நேரமில்லை. முதலில் நாம் காரியத்தில் இறங்கி ப்ராப்ளத்தை ஸால்வ் செய்யமுயலலாம்.

அவளே ஸாஃப்ட்வேர்  ரொட்டீனை டௌண்ட்லோட் செய்து தகுந்த இடத்தில் சேர்த்து ப்ரோக்ராம் டெஸ்ட் செய்து பிறகு சிஸ்டம் டெஸ்ட் செய்தாள். முதல் முயற்சியிலேயே எல்லாவற்றிலும் ரிசல்ட் சரியாய் அமைந்து வெற்றிகரமாய் முன்னேறியது. பிறகு டீம் மெம்பரைக் கூப்பிட்டு லைவ் டெஸ்டிற்கு ரெடிபண்ண உத்தரவு பிறப்பித்தாள்.

ரமேஷிடம் நடந்ததைப் பகிர்ந்து கொள்ள ஷகீலா மனம் துடிதுடித்தது.  ஹாட் லைனில் ‘ ஹார்ட்டீ தாங்க்ஸ். சிஸ்டம் டெஸ்ட்வரை எல்லாம் சக்ஸஸ். லைவ் டெஸ்ட் ரிசல்ட் வர இன்னும் இரண்டு மணி நேரம் பிடிக்கும். உங்களின்  எதிர்பாராத இந்த ஹெல்ப்பிற்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகளில்லை’ என்று மெசேஜ் விட்டாள்.

‘கவலை வேண்டாம். கண்டிப்பாக அதுவும் சக்ஸஸாக நிறைவேறும்’. இது ரமேஷின் ரிப்ளை.

‘என்ன உறுதியான ஆறுதலான பதில்! ஆம்! எப்படி என்னைப் பற்றியும் என் ப்ராப்ளத்தைப் பற்றியும் உங்களுக்குத் தெரிய வந்தது?’

‘நேற்று காஃபி ஹௌஸில் உங்களுடைய அடுத்த  க்யூபிகிளுக்குள் நான் என் நண்பனின் வருகைக்காகக் காத்திருந்தபோது உங்களுக்கும் நிருபமாவுக்கும் நடந்த சம்பாஷணையைக் கேட்க நேர்ந்தது. பிறகு நான் ஜெண்ட்ஸுக்கு செல்லும்போது உங்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது!’

‘என்ன, பாக்கியமா?!!!!!!!!!!!!!’

‘ஆமாம். மேலும் சொல்லவா?’

‘ம்!’

‘உங்களைப் பார்த்துச் சொக்கிப் போனேன்! உங்களுக்கு எப்பாடுபட்டாவது உதவ முடிவு செய்தேன். ஜெண்ட்ஸிலிருந்து திரும்பி வரும்போது உங்களைக் காணோம். பிறகு நிருபமாவைப் பார்த்து என்னை ஸாஃப்ட்வேர் டெவெலப்பர் என்று அறிமுகம் செய்துகொண்டு உங்களைப்பற்றியும் உங்கள் ப்ராப்ளத்தைப்பற்றியும் விலாவாரியாகக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.  என்னுடைய ஒரு ஸாஃப்ட்வேர் உங்கள் ப்ராப்ளத்தை ஸால்வ் பண்ணுவதற்காகவே  தயாரிக்கப்பட்டிருப்பதாக அமைந்திருந்ததை அறிந்தேன். ஆகையால்  உங்களுக்கு என்னால்   ஆணித்தரமாக உதவ முடியும் என்பதையும் நிருபமாவிடம் உறுதியாய் தெரியப்படுத்திக்கொண்டேன்’.

ஷகிலா, ரமேஷ் ‘உங்களைப் பார்த்து சொக்கிப் போனேன்’ என்று சொன்னதைக் கேட்டதில் ஒரு இனந்தெரியாத இன்பம் உடலெல்லாம் பரவுவதை உணர்ந்தாள். அடக்கிக்கொண்டு ‘என்னை நேரிலேயே பார்த்து ஹெல்ப் பண்ணியிருக்கலாமே?’ என்றாள்.

‘அதற்கு ஒரு சிறு தடங்கல். நீங்கள் நிருபமாவிடம் பேசியவிதத்திலிருந்து ஆண்களைச் சட்டை செய்யாதவர் என்றும் வெறுப்பவர் என்றும் தெரியவந்தது. நேரிலே  ஆகையால்தான் வரவில்லை. மேலும் நிருபமாவிடம் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டுகோள் விடுத்தேன்’.

திடீரென்று சாட் டிஸ்கனெக்ட் ஆகி சில வினாடிகள் அமைதி நிலவியது.

ரமேஷ் ஃபோனில் ஃபேஸ்டைம் கால் வந்தது. ரமேஷ் தன் ஃபிகரை சரியாக அட்ஜஸ்ட் செய்து ‘ஹலோ’ என்றான். அதில் ஷகீலாவின் அழகான பஸ்ட் உருவம் மிகவும் கவர்ச்சியாக சல்வார் கமீஸில் தென்பட்டதைக் கண்டு ரமேஷ் இரண்டாம் முறையாக சொக்கிப்போனான்.

ஷகீலாவின் பதினோரு வருடத்திற்கு ஒருமுறை மலரும் நீலக்குறிஞ்சி மலர் போன்ற மனம், அத்தி பூத்தாற்போல் அப்போது  மெல்லப் பூரணமாக  விரிந்து மலர்ந்து மகரந்த  நறுமணத்தை  அள்ளி வீசியது. ரமேஷாகிய வண்டு அதை உண்டு மூழ்கித் திளைத்தது.

ஷகீலா ‘ம்…….!!!! நான் எதிர் பார்த்ததைவிட மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஆண்களைச் சட்டை செய்யாமல் இருந்தது என் கேரியரில் நான் காட்டிய ஆர்வம். ஆண்களை வெறுப்பவர் என்று நீங்கள் யூகித்தது தவறு. அதுவே என் இப்போதைய மகிழ்ச்சி. ஆமாம், நான் என்ன உணர்ச்சியற்ற மரக்கட்டை என்று நினைத்துக் கொண்டீர்களாக்கும்! ம்….  எப்போது பார்க்கலாம்?’ என்றாள்.

‘நாளை இரவு 9 மணிக்கு அதே காஃபி ஹௌஸில் கேண்டில் லைட் சப்பர்.. ஓகே?’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.