கலைமாமணி , சிந்தனைச் செம்மல், எழுத்துச் சித்தர் என்றெல்லாம் பட்டம் , மற்றும் பல விருதுகள் வாங்கிய – பாலகுமாரன் என்கிற, தமிழ் எழுத்துலகத்தின் மாபெரும் தூண் இன்று (15 மே 2018) விழுந்துவிட்டது.
விருதுகள் இவரைத் தேடி வந்தன.
திரைப்படங்கள் இவருக்குப் புகழை அள்ளித்தந்தன ( ரஜினிகாந்த் பேசிய ‘நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி’ என்ற பாட்ஷா வசனம் இவர் பேனாவில் உதித்ததுதான்)
இவரது பல நாவல்கள் சிறுகதைகள் ஆன்மீகக் கட்டுரைகள் மக்கள் மனதில் வெகுகாலம் நிலைத்து நிற்கும்.
அவரின் முழுமையான வெற்றிகளைத் தெரிந்து கொள்ள http://www.writerbalakumaran.com
என்ற இணைய தளத்திற்குச் சென்று பாருங்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கும் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கும் குவிகம் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாலகுமாரன் என்ற எழுத்துலகத்தின் மாபெரும் தூண் சாய்ந்துவிட்டது. தமிழ் இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பு.
LikeLike