


தமிழ்நாட்டில் ஒரு புது வித வைரஸ் பரவி வருகிறது.
இது படித்தவர் படிக்காதவர் அனைவரையும் ஒருசேரப் புதை குழியில் தள்ளப்போகும் வைரஸ்.
இளைஞர், நடுத்தர வயதினர், முதியோர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்கி வரும் வைரஸ் . .
அரசியல் கட்சிகளும், ஒருசில தனிப்பட்ட அமைப்புகளும் இவற்றைப் பரப்பி வருகின்றன.
இது அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டை அடியோடு அழிக்கப் போகிறது.
உங்களுக்கே புரிந்திருக்கும் எதைப்பற்றிச் சொல்லவருகிறேன் என்று.
அதுதான் எதையும் எதிர்க்கவேண்டும் என்ற ” எதிர்ப்பு வைரஸ்.”
சென்னை-சேலம் எட்டுவழி சாலையா? இது தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம்!
ஏன் இஸ்ரோ செயற்க்கைக் கோளை அனுப்புகிறது? அதில் சூது !
பிளாட்டினம் தாது தமிழக மண்ணிலிருந்து சீக்கிரம் சூறையாடப்போகிறது!
கச்சத்தீவு தேவையில்லாமல் கொடுக்கப்பட்டது!
ஈழத் தமிழரைக் காப்பாற்றாத அரசே ஒழிக !
கூடங்குளம் தேவையற்றது.
ஹைட்ரோகார்பன் கூடவே கூடாது.
மீத்தேன் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கப்போகிறது.
நீட் தேர்வு தமிழக இளைஞர்களுக்கு எதிரானது
ஜல்லிக்கட்டை எதிர்ப்பவன் தமிழரின் விரோதி
ஸ்டைர்லெட் மட்டும் தமிழகத்தை மாசு படுத்துகிறது.
கன்யாகுமரிக்கு அருகில் துறைமுகமா? மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்துவிடும் !
சிபிஎஸ் சி தேவையற்றது.
எய்ம்ஸ் மருத்துவமனை இங்கே வேண்டாம் அங்கே வேண்டாம்
மெட்ரோவைப் புறக்கணிப்போம்!
ஜெய்ல் பைப் தமிழகத்தை ஓட்டை போடப்போகிறது
ஐபிஎல் மேட்ச் தமிழினத்திற்கு எதிரி !
காவிரித் தண்ணீருக்காகப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராட்டம்
மீனவர் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
ஜாதிகளுக்கு ஆதரவாகப் போராட்டம்
தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டம்
சினிமாவை எதிர்த்துப் போராட்டம்
அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் , பந்த்
இதற்கெல்லாம் ஆரம்பம் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் !
இந்த எதிர்ப்புகளெல்லாம் ஏதாவது அறிஞர் குழாம் ஆராய்ச்சி செய்து வெளியிட்டு அதன்படி மக்கள் போராட்டம் நடத்தியிருந்தால் அவற்றிற்கு ஆதரவுக் கரம் நீட்டலாம் – நீட்டவேண்டும்.
இவற்றுள் பல , தங்கள் அரசியல் அல்லது குழுவின் லாபத்துக்காகத் தனிப்பட்ட மனிதர்கள் – இயக்கங்கள் நடத்தும் சுயநலப் போராட்டங்கள்.
‘ஏனப்பா இப்படி?’ என்று கேட்டால் , “நீ அந்த ஜாதியின் அடிவருடி. நீ அந்த ஆதிக்கத்தின் கைக் கூலி. தமிழினத்துக்கு எதிரி”
என்ற அசிங்கமான வசவுகள்.
இதில் முகநூலும் வாட்ஸ் அப்புக்களும் அதிகம் பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பிக்கொண்டு வருகின்றன.
இதற்கு பலிகடா ஆவது ஒட்டு மொத்தமான தமிழகம்.
போராட்டமே வாழ்க்கை என்று இருந்த நாடுகள் மாநிலங்கள் எல்லாம் மாறிக்கொண்டே வருகின்றன.
இந்தியாவிலேயே அதிகமான போராட்டங்கள் நடைபெறும் மாநிலம் தமிழகம்!
(2015இல் 20,450 போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன)
இப்படியே போனால் தமிழ்நாடு சுடுகாடாய்ப் போய்விடும் என்று ரஜினி சொன்னதில் என்ன தப்பு?
சிறப்பான, தைரியமான, தற்போதைய தேவையான தலையங்கம். சில பல கோளாறுகள்தான் அமைதி பூங்காவை ரணகளம் ஆக்குகின்றன. தலையெடுத்து நடத்த சரியான தலைமை இல்லை, அதனால் தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட்டான். அதிகம் பொதுமக்கள் கலந்து கொள்ளாத பல போராட்டங்கள் பொதுமக்கள் போர்வையில் குளிர் காய்கிறது. என்ன வேண்டுமானாலும் பேசலாம், எனக்கு பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்றும், மாறுபட்ட கருத்து வந்தால் அவர்கள் மீதும், வீட்டின் மீதும் கல்லெறி கலாச்சாரம் கேவலமாக இருக்கிறது.
LikeLike