நண்பர் பாம்பே கண்ணன், ஏற்கனவே கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதையை ஒலிப்புத்தகமாகக் கொண்டுவந்து மாபெரும் வெற்றி அடைந்தவர்.
பொன்னியின் செல்வனை எப்படியாவது திரைவடிவில் பார்க்க ஒரு டெலி பிலிம் எடுக்கவேண்டும் என்பது அவரது நீண்ட நாள் கனவு – தவம்.
எம் ஜி ஆர் கமலஹாசன் மணிரத்னம் இவர்களெல்லாம் முயற்சித்து முடியாமல் கைவிட்ட காவியம் இது.
பாம்பே கண்ணனும் அவரது நண்பர் வெங்கடராமனும் தங்கள் தரப்பில் ஐம்பது லட்சம் போட்டு மேற்கொண்டு ஐம்பது லட்சத்தை வாசகர்களிடமிருந்து ‘மக்கள் நிதி ‘ ( CROWD FUNDING) மூலமாகத் திரட்ட எண்ணியுள்ளனர்.
அதற்கான பணியைத் துவங்கிவிட்டனர்.
விஷ்பெர்ரி என்ற பம்பாய் நிறுவனம் இவர்களுக்காக மக்களிடமிருந்து நிதி திரட்டித்தர சம்மதித்து அதற்கான பணிகளைத் துவங்கிவிட்டது.
இதுவரை கிட்டத்தட்ட 3 லட்சம் வந்துள்ளன. இன்னும் 43 நாட்களில் எதிர்பார்த்த 50 லட்சம் வரவேண்டும்.
பொன்னியின் செல்வனை திரைவடிவில் பார்க்க நாம் ஆவலோடு காத்திருக்கிறோம்.
குவிகம் தன் பங்கிற்கு 10000 ரூபாய் கொடுத்து இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வாழ்த்தியுள்ளது.
குவிகம் ஆசிரியரும் நண்பர்கள் உறவினர்கள் மூலமாக நிதி திரட்டவும் முடிவு செய்திருக்கிறார்.
குவிகம் வாசகர்களை பொன்னியின் செல்வன் ரசிகர்களிடம் இந்தச் செய்தியைச் சேர்ப்பித்து அவர்களை ஒரு கணிசமான தொகையை விஷ்பெர்ரி மூலம் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம்.
அதற்கான லிங்க் கீழே:
/campaign/ponniyin-selvan/#/campaign-new
பொன்னியின் செல்வன் தயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டு இந்தத் திட்டத்திற்கு உதவுங்கள் : அதற்கான வீடியோ இங்கே!
ஐநூறு ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் வரை நீங்கள் தரலாம்!.
வாருங்கள் புதிய சகாப்தம் படைப்போம்!