அம்மா கை உணவு (7 )
நம் வீடுகளில் அன்றாடமோ அல்லது விசேஷ நாட்களிலோ தயாரிக்கும் உணவு வகைகளை வரிசைப்படுத்தி அவற்றின் மகிமைகளை வியந்து எளிய தமிழில் பாடப்படும் கவிதைப் பாடல்கள் இவை. இது ஒரு அறுசுவைத் தொடர். ஒவ்வொரு மாதமும் ஒரு கவிதைப் பாடலை குவிகத்தில் வாசகர்களுக்கு வழங்கி மகிழ்கிறேன்.
கொழுக்கட்டை மஹாத்மியம் மார்ச் 2018
இட்லி மகிமை ஏப்ரல் 2018
தோசை ஒரு தொடர்கதை மே 2018
அடைந்திடு சீசேம் ஜூன் 2018
ரசமாயம் ஜூலை 2018
போளி புராணம் ஆகஸ்ட் 2018
அன்னை கைமணக் குறள்கள் !
எச்சுவை கண்ட வாயிலும் ஊறும்
இஞ்சித் துவையலென்றால்.
ஏணி வைப்பினும் எட்டுமோ என்னம்மை
இரசத்தின் கைமணமே.
எக்கூட்டும் வேண்டாவெனப் புகல்வர்
புளிக்கூட்டு நா தொட்டவர்.
வாவென்று சொல்லி வயிற்றைக் கரைக்கும்
வற்றல் குழம்பு மணம்.
வழுக்கிச் செல்லுமே வாய்க்குள் மோர்க்குழம்பின்
சேப்பங்கிழங்கெனும்தான்.
பருப்பும் பசுநெய்யும் பிசைந்தாலும் வருமோ
பொரித்தல் கூட்டு சுவை.
மூவாசையை விட்டேன் வெங்காய சாம்பார் விட்ட
தோசையை விட்டு விடேன்.
பர்கரும் பிட்சாவும் வாங்குமே பிச்சை
கரமுர அடையிடமே.
கன்னலும் கனியும் தருமோ அன்னை
களியின் கூட்டின் சுவை.
எண்ணிக்கை இல்லாது வேண்டும் எழுபிறப்பும்
அன்னை கொழுக்கட்டையே.
@@@@@@@@@@@@@@