பாசம் என்னடா பாசம் அதுவெறும் பகல்வேஷம்
பசப்பு வார்த்தைகள் ஏகம் போகிறோம் நாம்மோசம்!
உறவென்பது நம்மிடம் பணம் இருக்கும்வரை
நட்பென்பது நம்மிடம் வசதி இருக்கும்வரை
பையிலே பணமிலையேல் விலையில்லை இங்கே
பண்புக்கும் நேர்மைக்கும் மதிப்புதான் எங்கே?
பணமென்றால் வாய்திறக்கும் பிணமென்றான் கவிஞன்
போடடா அவன்வாயில் அள்ளியள்ளி சர்க்கரை
வாழ்ந்தாலென்ன நீ வீழ்ந்தாலென்ன
பணமிலையேல் உன்மீது யாருக்கடா அக்கறை!
நாணயம் பேச்சிலே என்றகாலமெலாம் போச்சு
நாணயம் கையிலே என்றகாலமும் வந்தாச்சு
பணம்காசு பணம்காசு என்பதே உயிர்மூச்சு
பணம்காசு தொலைந்தாலே இன்னுயிரும் போச்சு!
Advertisements