வெப் சீரிஸ்

Image result for webseries

 

சினிமா, சீரியல் இவற்றைத்தாண்டி குறும்படங்கள் ஒருபக்கம் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றன. தற்போது இவற்றின் இன்னொரு வடிவமாக வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற ஆரம்பித்துள்ளன. இனிவரும் காலங்களில் வெப் சீரிஸ்கள் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி.

நிமேஷ் இயக்கத்தில் SRINIKHA நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஏ ஸ்டோரி. 40 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த ஏ ஸ்டோரியில் சமுதாயத்தை உலுக்கிப் பார்க்கும் பல விஷயங்களைப் பேசியிருப்பதாக இயக்குனர் நிமேஷ் கூறியுள்ளார். துணிச்சலான காட்சிகளுடன் வெளியாகியுள்ள ஏ ஸ்டோரி டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பழைய வி‌ஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால் சினிமாக்காரர்கள் வேஸ்ட். மனோபாலா, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் இப்போது ‘வெப் சீரிஸ்’ தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.
Image result for web series in tamil

சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் அடுத்தகட்டமாக இந்த வெப் சீரிஸ் பார்க்கப்படுகின்றன. அதற்கு சமீபத்திய உதாரணம், ‘காதலில் சொதப்புவது எப்படி’  ‘மாரி’ படங்களை இயக்கிய பாலாஜி மோகன் இயக்கி நடித்த, ‘ I am suffering from kadhal’ வெப் சீரிஸின் வெற்றி. இந்த நிலையில், இயக்குநர் கௌதம் மேனன் தனது ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ தயாரிப்பில் ‘வீக் எண்ட் மச்சான்’ என்னும் வெப் சீரியஸை தயாரித்துவருகிறார். வி.இஸட் துரையும் தற்போது ‘அருவி’ படத்தில் நடித்த சுவேதா சேகரை வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்கத் திட்டமிட்டுள்ளார். ஆனால், இதை அவர் இந்தியில் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சுவேதா அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

நடிகர் மாதவன், உடல் உறுப்பு தானத்துக்காகத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளை மையமாக வைத்து ‘பிரீத்’ என்ற வெப் சீரியஸில் நடித்தார். இந்தியில் இதை மயங் ஷர்மா இயக்கினார். மாதவனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவும், தமிழில் பாபி சிம்ஹாவும் வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரித்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.

இயக்குநர் வசந்தபாலன் , தனுஷ் , கௌதம் மேனன் ஆகியொரும் வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டு வருகிறார்கள்

ஆட்டோ சங்கரின் கதை வெப் சீரிஸாக வெளிவருகிரது.

உண்மைச் சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்கும்போது சென்சாரில் படக்குழு பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, இதற்கான மாற்று ஊடகமாக இணையத் தொடர்களை கையில் எடுத்துள்ளனர் பலர். அவற்றிற்கு சென்சார் பிரச்சினை இல்லை என்பதால் தங்கள் மனதில்பட்டதைத் தயக்கமின்றிச் சொல்ல முடிவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், சென்சார் இல்லாததால் இத்தகைய இணையத் தொடர்களில் ஆபாசம் அத்துமீறிக் காணப்படுவதாகப் பரவலாகக் குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது

நலன் குமாரசாமி, இப்போது, ’கல்யாணமும் கடந்து போகும்’ என்கிற வெப் சீரிஸ் இயக்குவதில் பிஸியாகியுள்ளார்.

10 கதைகளைக் கொண்ட இந்தத் தொடரில் திருமண வைபவங்களில் நடக்கும் அபத்தங்களைப்பற்றி நகைச்சுவையாகச் சொல்வதோடு, வரதட்சணை, காதல், முதியவர்களிடையே உள்ள உறவு, கடல் தாண்டிய காதல், மறுமணம் போன்ற விஷயங்களும் அலசப்படுகிறது.

Image result for web series in tamil

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.