கண்ணம்மா – தில்லை வேந்தன் Posted on October 15, 2018 by sundararajan கண்ணம்மா ! கார்த்திகை நிலவோ, கவிதையின் அளவோ காதலின் விளைவோ கண்ணம்மா ஈர்த்திடும் பண்ணோ,என்னிரு கண்ணோ ஈடிலாப் பொன்னோ கண்ணம்மா. ஆர்த்திடும் அலையோ, அசைந்திடும் சிலையோ ஆசையின் வலையோ கண்ணம்மா பூத்திடும் அரும்போ, பொங்கலின் கரும்போ புன்னகைக் குறும்போ கண்ணம்மா. காலையின் பனியோ, கற்பகக் கனியோ கற்பினுக்கு அணியோ கண்ணம்மா. வேலையின் முத்தோ, மென்மலர்க் கொத்தோ மேன்மையின் வித்தோ கண்ணம்மா மாலையின் காற்றோ, மையலின் ஊற்றோ, மஞ்சளின் நாற்றோ கண்ணம்மா. சோலையின் வனப்போ, சுவைதரும் இனிப்போ சொற்றமிழ்ச் சிறப்போ கண்ணம்மா. ( வேலை — கடல் ) தீங்கனிச் சாறோ, செய்தநற் பேறோ, சிரித்திடும் சீரோ கண்ணம்மா. ஈங்கொரு திருவோ, எழிலதன் உருவோ, இலக்கியக் கருவோ கண்ணம்மா. பாங்குறும் ஒளியோ, பாற்கடல் துளியோ, பைந்தமிழ்க் கிளியோ கண்ணம்மா. ஓங்கிய பண்போ, உள்நிறை அன்போ, உண்டெவர் உன்போல் கண்ணம்மா. Rate this:Share this:WhatsAppFacebookTwitterLike this:Like Loading...
பாரதி கண்ணம்மா உடன் வாழ்ந்தார்.தில்லை வேந்தன் நம் எண்ணத்தை புதுப்பிக்கிறார்.
LikeLike
Thank you
LikeLike
பிரமாதம் அப்படின்னு சொன்னா அது உங்கள 1% தான் நல்லா இருக்குன்னு சொல்றதா இருக்கும்
LikeLike
Arumai
LikeLike
Very nice. Good flow if word
LikeLike