
சென்ற மாதம் மேற்குத்தொடர்ச்சி மலை திரைப்படத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.
அதைப்போல ஆனால் அதைவிட இன்னொரு படம் தமிழ் சினிமா உலகைக் கலக்கி வருகிறது.
அது தான் விஜய் சேதுபதி – திரிஷா நடித்து வெளியான 96 என்ற படம்.
பார்த்த மக்கள் அனைவரும் ஒரே குரலில் ஏகோபித்த பாராட்டு (96%)
அழகி, ஆட்டோகிராஃப், பள்ளிக்கூடம் போன்ற கதை கொண்டது தான் இந்த 96.
1996இல் பத்தாவது படித்த வகுப்பு மாணவர்கள் 22 ஆண்டுகள் கழித்து திரும்பவும் சந்திப்பதுதான் கதையின் அடித்தளம்.
அப்போது காதலித்துத் திருமணம் செய்துகொள்ளாமல் பிரிந்துவிட்ட இருவர் மீண்டும் சந்திக்கும் உணர்ச்சி பூர்வமான காவியம்தான் இது.
பா. ப. ப.
பார்ப்பதற்கு படம் பரவசம்
அடுத்தது,
இன்னொரு பேர் சொல்லும் படம் பரியேறும் பெருமாள்.

சாதியும் மதமும் மனித இனத்திற்கே எதிரானது என அழுத்தம், திருத்தமாகச் சொன்ன விதத்தை மனதாரப் பாராட்டுகிறோம் – தினமலர்
பத்திரிகைகளும் ரசிகர்களும் மனம் திறந்து பாராட்டுகளை அள்ளி வீசும் படம்
அடுத்தது,
அடுத்தது மணிரத்னத்தின் ‘ செக்கச் சிவந்த வானம்’

வசூலில் சாதனை படைத்த மணிரத்னத்தின் ஸ்டைலிஷ் கேங்க்ஸ்டர் படம்.
அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், மற்றும் பல மாடல் அழகிகள் நடித்த வாரிசுப் போட்டி படம்.
தூள் பறக்கிறது.