குவிகம் ஐந்து ஆண்டுகள்
-
2013 நவம்பரில் துவங்கப்பட்ட குவிகம் மின்னிதழ் இந்த இதழுடன் ஐந்து ஆண்டு நிறைவு பெறுகிறது.
-
1500க்கும் மேற்பட்ட டிஜிட்டல் பக்கங்கள் இணைய தளத்தில் குவிகத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
-
எத்தனை பேர் எதைப் படித்தார்கள் – விடுத்தார்கள் என்பதற்கான புள்ளி விவரம் இருக்கிறது.
-
200 பேரில் ஆரம்பித்துத் தற்போது 2700 பேருக்கும் அதிகமான நபர்களுக்கு அனுப்பி வருகிறோம்.
-
அர்ஜூன், விஜயலக்ஷ்மி, கிருபாநந்தன் மூவரும் குவிகத்தின் மூன்று முக்கிய புள்ளிகள்.
-
கல்கண்டுபோல ஆரம்ப காலத்தில் இருந்த குவிகம் தற்போது குமுதம்மாதிரி இருக்கிறது.
-
பல நண்பர்கள் தங்கள் சிறந்த படைப்புக்களை குவிகத்திற்கு அனுப்பிப் பேருதவி புரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த கரங்கூப்பு !
-
மின்னிதழில் தொடங்கிய குவிகம் இதழ், குவிகம் இலக்கியவாசல், குவிகம் பதிப்பகம், குவிகம் இல்லம், குவிகம் புத்தகப் பரிமாற்றம் , அளவளாவல் , என்று விரிந்து வருவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
2018 ஆம் ஆண்டிலேயே குவிகம் மின்னிதழைப் பெரும் அளவில் மாற்ற எண்ணினோம். தவிர்க்க முடியாத காரணங்களால் அதைச் செயலாற்ற முடியவில்லை.
இந்த ஆண்டு 2019 ஜனவரியிலிருந்து புதிய மாற்றங்கள் கண்டிப்பாக வரும்.
அதற்காக உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் வரவேற்கிறோம்.
குறிப்பாக, கீழ்க்கண்ட செய்திகளில் உங்கள் கருத்து அவசியமாகிறது.
-
குவிகம் — தொடரலாம்/ நிறுத்தலாம்
-
தலையங்கம் —- தேவை/தேவையில்லை
-
சிறுகதைகள் – A4 அளவில் ஒரு பக்கம் போதும் / 4-5 பக்கங்கள் இருக்கலாம்.
-
கட்டுரைகள் – அதிகம் வேண்டும் /வேண்டியதில்லை
-
ஜோக்குகள் — தேவை/தேவையில்லை
-
சினிமா விமர்சனம் /செய்திகள் — தேவை / தேவையில்லை
-
குறும்படம் — அதிக அளவில் தேவை / ஓன்றிரண்டு போதும்
-
ஆடியோ பக்கங்கள் — தேவை /தேவையில்லை
-
ஆராய்ச்சிக் கட்டுரைகள் – தேவை/தேவையில்லை
-
படங்கள் — தேவை/ தேவையில்லை/ இன்னும் அதிகம் வேண்டும்
-
தொடர் கதைகள் —- தேவை/தேவையில்லை
-
Font / Page Design — பரவாயில்லை/ மாறவேண்டும்
-
குறுஞ்செய்திகள் : நிறைய வேண்டும் / வேண்டாம்
-
மற்ற உங்களுக்குத் தேவையான செய்திகள்:
1)
2)
3)
தங்கள் கருத்துக்களை editor@kuvikam.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
நன்றி.
சுந்தரராஜன்
(ஆசிரியர், குவிகம் )
Advertisements