
தலைப்பு புரியவில்லையா? கவிதையைப் படியுங்கள் ! தானே புரியும்.
படிக்க வேண்டும் என்றெண்ணிப்
பலநூல், பலநாள் சேர்த்துவைத்தேன்
அடுக்கி வைக்க இடமில்லை;
ஆனால் ஆர்வம் விடவில்லை.
இடுக்கும் இண்டும் செருகிவைத்தேன்
எல்லாப் பரணும் அடைத்துவைத்தேன்
தடுக்க இயலா மனநோயா ?
தாளா விருப்பா ? தெரியவில்லை !
இலக்கியங்கள் இலக்கணங்கள்
என்றோ படித்த பாடங்கள்
கலக்கும் கரிய பேய்க்கதைகள்
காதல் கதைகள் , போர்க்கதைகள்
விலக்க முடியாப் புராணங்கள்,
விரும்பித் தொகுத்த இதழ்க்கதைகள்.
நலக்க ருத்து நவில்நூல்கள்
நானே அறியாப் பலநூல்கள்.
இங்கும் அங்கும் சிலவற்றை
எடுத்துப் பிரித்துப் பார்த்தாலும்
எங்கு நேரம் இருக்கிறது ?
ஏறும் வயதோ சிரிக்கிறது.
மங்கும் கண்ணோ மறைக்கிறது
மாறா ஆர்வம் மறைகிறது.
தெங்கம் பழம்கொள் நாயைப்போல்
திகைப்பு நெஞ்சில் விரிகிறது.
இதன் தலைப்பு : படிக்கச் சேர்த்தல்
சுண்டோகு - TSUNDOKU - ஜப்பானிய வார்த்தை - TSUN + DOKU என்ற இரு பதங்களின் சேர்க்கை. TSUN என்றால் சேர்த்தல் -
to pile up ; doku என்றால் படிக்க - reading
ஆக, TSUNDOKU என்றால் படிக்க வேண்டும் என்ற ஆசையால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும் பழக்கம்'
( இதனால் தான் புத்தகக் கண்காட்சியில் 10-15 கோடி ரூபாய் புத்தக விற்பனையோ? )

TSUNDOKU வியாதிக்கு இருவகை மருந்து உண்டு !
ஒன்று இயற்கை வைத்தியம்: புத்தகங்களைப் படிப்பது.
இரண்டாவது, இன்றைய வைத்தியம்: குவிகம் புத்தகப் பரிமாற்றம்.

Very nice..learnt something new today from here- instead of opening the books i already have
LikeLike
very true…
LikeLike
Superb reflection of many hearts in a nutshell beautiful kavithai.
LikeLike