2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மதிப்பிற்குறிய எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ” சஞ்சாரம்” என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
இலக்கிய உலகில் அனைவரும் ஒருசேர இதை வரவேற்றிருக்கிறார்கள்.
தகுதி வாய்ந்தவருக்கும் தகுதி வாய்ந்த நூலுக்கும் கிடைத்த விருது இது.
இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த விருதைத் தாங்களே பெற்றதுபோல் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
புத்தக நண்பர்கள் குழுவில் இந்த நூலைப்பற்றி விமர்சனம் செய்தபோதே இந்த நூலுக்கு விருதுகள் குவியவேண்டும் என்பதே அனைவரது எண்ணமாக இருந்தது.
திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு குவிகம் இதய பூர்வமான வாழ்த்துதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது!
இதற்கான அவரது ஏற்புரையை சுருதி டிவி வழங்கியுள்ளது. அதை இங்கே பதிவுசெய்வதில் பெருமகிழ்வு எய்துகிறோம்.
(நன்றி சுருதி டிவி )