தமிழில் ஒலிப்புத்தகங்கள் தற்போது நிறைய வரத்தொடங்கிவிட்டன.
நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் பங்கு இதில் மிக மிக முக்கியமானது.
பொன்னியின் செல்வனை இவர் 78 மணிநேரம் கேட்கக்கூடிய ஒலிப்புத்தகமாக மாற்றி வெற்றி கண்டது இவரது சிறப்பு. மேலும் எண்ணற்ற ஒலிப்புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னும் நிறைய புத்தகங்களை ஒலி வடிவில் கொண்டுவருகிறார்.
https://www.audible.in/ இல் நிறைய ஒலிப்புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கின்றன. அதற்கு சந்தாதாரராக வேண்டும். அதிகமில்லை மாதம் ரூபாய் 200 மட்டுமே. உங்கள் ஸ்மார்ட் போனில் இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால் எங்கேயும் எப்போதும் கேட்கலாம். அசோகமித்திரன்,( வாசித்தளிப்பவர் திருப்பூர் கிருஷ்ணனாமே ?) இந்திரா பார்த்தசாரதி ( குரல் அனுராதாவாம்) , கல்கி ,ஜெயகாந்தன்,புதுமைப்பித்தன் போன்றவை இருக்கின்றன.
இதோ இரண்டு ஒலிப்புத்தகங்கள் ! பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் வாண்டுமாமாவின் புத்தகங்கள். கேட்டு மகிழுங்கள் !