கோமல் சுவாமிநாதன் அவர்களின் நினைவலைகளான பறந்துபோன பக்கங்கள் குவிகம் பதிப்பாக 16 – 1 – 19 அன்று சென்னை புத்தகக் காட்சி சிற்றரங்கத்தில் வெளியிடப்பட்டது.
இது குவிகம் பதிப்பகத்தின் 25 வது பெருமைமிகு பதிப்பு.
கோமல் அவர்களின் குடும்ப நண்பரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் வெளியிட்டார்.
பெற்றுக்கொண்டவர்கள் கோமல் அவர்களுடன் நாடக உலகில் பயணம் செய்த கவிஞர் வைதீஸ்வரன், நாடகத்துறை எழுத்தாளர் T V ராதாகிருஷ்ணன், சுபமங்களா இணையாசிரியராக ஐந்தாண்டுகள் உடன் பயணித்த குடந்தை கீதப் பிரியன் மற்றும் தமுஎகச வைச் சேர்ந்த இரா தெ முத்து ஆகியோர்.
பேசிய அனைவரும் கோமல் அவர்களின் பன்முக ஆளுமையையும் மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் மதிக்கும் பண்பினையும் நாடகம் மற்றும் இலக்கியத் துறைகளில் செய்த நிகரற்ற பங்களிப்பையும் நினைவு கூர்ந்தார்கள்.
அவரது பரந்துபட்ட அனுபவங்களின் பதிவான பறந்துபோன பக்கங்கள் நடனம் அவர்களின் படங்களுடன் வருவது வரவேற்கத் தக்கது என்று அபிப்பிராயப்பட்டார்கள்.
தாரிணி கோமல் நாடகத்துறையிலும் இலக்கியத் துறையிலும் தந்தையின் பணியைத் தொடர்வதையும் எல்லோரும் பாராட்டினார்கள்
சுரேஷ் சீனு வரைந்த அட்டைப்பட ஓவியம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
அரியதொரு மனிதரின் சிறந்ததொரு படைப்பிற்கு நல்லதொரு விழா.
நல்ல பணி தொடர்க வாழ்த்துகள்
LikeLike
நன்றி !
LikeLike