மகிழ்ச்சியை
நிலையென்றெண்ணி
திளைத்தாடும்
மனத்தினைக்
கரை போட்டுத்தடுத்துவிடு
ஓடும் மழை நீரின்
ஒழுங்கான குமிழியாய்
உள்ளத்தில் தோன்றினாலும்
உள்சென்று ஆழத்தில்
உயறைபனியாய் ஆனது
நட்பு கொண்டு வந்து
சேர்த்ததோ
நாடிய உறவுதான்
அள்ளித் தந்ததோ
எப்படியோ
வந்துவிட்டது தூறல்
பாம்பின் நிழலில்
பதுங்குவது தெரியாமல்
மனம் பரவசத்தில்
துள்ளிக் கொள்கிறது
பூக்கள் மலர்வது
பறிப்பதற்கு மட்டுமன்று