வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி “மலரும் உள்ளம்” 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். “சிரிக்கும் பூக்கள்” என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், “குழந்தைக் கவிஞர்” என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.
நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில:
- மலரும் உள்ளம் – 1 (பாடல் தொகுதி) –
- பாப்பாவுக்குப் பாட்டு (பாடல் தொகுதி)
- சின்னஞ்சிறு பாடல்கள் (பாடல் தொகுதி)
- சுதந்திரம் பிறந்த கதை
- ஈசாப் கதைப் பாடல்கள் (பாடல் தொகுதி)
- ரோஜாச் செடி
- உமாவின் பூனைக் குட்டி
- அம்மாவும் அத்தையும்
- மணிக்குமணி
- மலரும் உள்ளம் – 2 (பாடல் தொகுதி)
- கதை சொன்னவர் கதை
- மூன்று பரிசுகள்
- எங்கள் கதையைக் கேளுங்கள்
- நான்கு நண்பர்கள்
- பர்மாரமணி
- எங்கள் பாட்டி
- மிருகங்களுடன் மூன்று மணி
- நல்ல நண்பர்கள்
- பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி)
- குதிரைச் சவாரி
- நேரு தந்த பொம்மை
- நீலாமாலா
- பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி)
- வாழ்க்கை விநோதம்
- சின்னஞ்சிறு வயதில்
- பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள்
அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன.
அவரைப்பற்றிய காணொளி இங்கே: