சமீபத்தில் whatsapp க்கு தமிழில் என் வினவி என்று தமிழில் ஒரு கட்டுரையில் கூறப்பட்டது.
அதைப்பற்றித் தேடும்போது மலேசியாவில் நடந்த மாநாட்டில் அன்றாடம் உபயோகிக்கும் கணிணி சம்பந்தப்பட்ட கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்ட தொழில்நுட்பப் பெயர்களுக்குத் தமிழாக்கம் :
1. WhatsApp – புலனம்
2. YouTube – வலையொளி
3. Instagram – படவரி
4. WeChat – அளாவி
5.Messenger – பற்றியம்
6.Twitter – கீச்சகம்
7.Telegram – தொலைவரி
8. Skype – காயலை
9.Bluetooth – ஊடலை
10.WiFi – அருகலை
11.Hotspot – பகிரலை
12.Broadband – ஆலலை
13.Online – இயங்கலை
14.Offline – முடக்கலை
15.Thumb Drive – விரலி
16.Hard Disk – வன்தட்டு
17.GPS – தடங்காட்டி
18.CCTV- மறைகாணி
19.OCR – எழுத்துணரி
20 LED – ஒளிர்விமுனை
21.3D – முத்திரட்சி
22.2D – இருதிரட்சி
23.Projector – ஒளிவீச்சி
24.Printer – அச்சுப்பொறி
25.Scanner – வருடி
26.Smart Phone – திறன்பேசி
27.Simcard – செறிவட்டை
28.Charger – மின்னூக்கி
29.Digital – எண்மின்
30.Cyber – மின்வெளி
31.Router – திசைவி
32.Selfie – தம் படம் – சுயஉரு
33 Thumbnail – சிறுபடம்
34.Meme – போன்மி
35.Print Screen – திரைப் பிடிப்பு
36.Inket – மைவீச்சு
37.Laser – சீரொளி
அந்த மாநாட்டைப் பற்றித் தேடியபோது கிடைத்த தகவல்கள்:
1964ம் ஆண்டு புதுடில்லியில் 26வது கீழைத்தேயவியல் மாநாடு நடைபெற்றது.
1968ல் இரண்டாவது தமிழாராய்ச்சி மாநாடு சென்னையில் நடைபெற்றது. அறிஞர் அண்ணாதுரை முதலமைச்சராகக் கொண்ட தமிழ்நாடு இந்த மாநாட்டை சிறப்பாக நடாத்தியது.
மூன்றாவது மகாநாடு 1970ல் பிரெஞ்சு தலைநகரான பாரிசில் நடைபெற்றது.
நான்காவது மாநாடு இலங்கையில் 1974 ல் நடத்தப்பட்டது.
1981ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.தலைமையில் தமிழ்நாட்டில் மதுரையில் ஐந்தாவது மகாநாடு நடத்தப்பட்டது.
ஆறாவது மகாநாடு மலேசியாவில் 1987ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஏழாவது மகாநாடு 1989ம் ஆண்டு மொரிசியஸ் தீவில் நடைபெற்றது.
எட்டாவது மகாநாடு 1995 இல் தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது.
2015ல் மலேசியாவில் ஒன்பதாவது மகாநாடு நடைபெற்றது.
தற்போது அமெரிக்காவில் சிகாகோவில் 10 வது மாநாடு 2019 ஜூலை 3-7 தேதிகளில் நடைபெற இருக்கிறது.