தேய்ந்த நகம்
தெரிந்தது வீடெங்கும்
மாக்கோலம்.அழகையும் நறுமணத்தையும்
தொலைத்தே நின்றாள்
மழையில் நனைந்த மல்லிகை.தலைநிமிர வேண்டிய சமுதாயம்
தலைக் குனிந்தே
அலைபேசியுடன்.சூரியனும் உதித்தது
ஆனாலும் விடியவில்லை
பெண்களின் வாழ்வு.புதிய தீபம்
இருண்டே போனது
தீக்குச்சியின் முகம்.கடைசியாக அவன் சென்ற
வழித்தடம் சொல்லும்
இறைந்த பூக்கள்.உழைப்பின் வியர்வையும்
மணக்கவே செய்கிறது
பூக்கடைக்காரி.வறண்ட கோடை
நீர்க்குழாயில் நிரம்பி வழிகிறது
காற்று.கூடவே வந்தாலும்
என்னை தொடாமலேயே
நிழல்.