இந்த சாக்லேட் கிருஷ்ணா இன்று நம்மிடம் இல்லை !
இதை வரைந்தவர் இன்று இல்லை !
மேடை நாடகங்களிலும் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் விரசமில்லாத நகைச்சுவையை அள்ளி வழங்கிய
நகைச்சுவை மேதை இன்று இல்லை.
ஆயிரக்கணக்கான வெண்பாக்களைப் பாடிய கிரேஸி மோகனும் இன்று இல்லை.
புகழ் மாலை ஈட்டிய இவருக்கு அஞ்சலி மாலை சூட்டப்பட்டுவிட்டது.
அவர் பிரிவால் வாடும் நகைச்சுவைக் குடும்பங்கள் அனைத்திற்கும் குவிகத்தின் அஞ்சலி !
‘