‘கிரிக்கெட் உலகக்கோப்பை 2019’ ஒரு மாபெரும் திரில்லர்.
நியூசிலாந்தும் இங்கிலாந்தும் 50 ஓவர்களில் சமமாக 240 எடுத்து ‘டை’ நிலையில் இருந்தது.
சமனை உடைக்க சூப்பர் பவுல் வந்தது. அதன்படி இருவருக்கும் ஆளுக்கொரு ஓவர் கொடுக்கப்பட்டது.
ஆச்சரியம் என்னவென்றால் அதிலும் இரு அணிகளும் சமமாக 15 ஓட்டங்கள் எடுத்து சமநிலையில் நின்றன.
ஆட்டவிதியின்படி கடைசிப் போட்டியில் யார் அதிகமாக ‘பவுண்டரி’ எடுத்தார்களோ அவர்களுக்குத்தான் உலகக்கோப்பை !
அதன்படி இங்கிலாந்து – உலகத்துக்கு கிரிக்கெட்டைச் சொல்லிக்கொடுத்த அணி தன் சொந்த மண்ணில் முதன்முறையாக உலகக்கோப்பையை வென்றது.
உலகக்கோப்பை (2019) யின் கடைசி வினாடிகளைப் பாருங்கள் !
(அதே சமயத்தில் அதே இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் அதே விறுவிறுப்புடன் திரில்லர் போலவே நடைபெற்றது. நோவக் ஜோக்கோவிச் , பெடரரை டை-பிரேக்கரில்தான் வெற்றி பெற முடிந்தது. )
சரி, நம் இந்தியாவின் கதி என்ன?
இந்தியா பாகிஸ்தானை வென்றது !
இந்தியா பங்களாதேஷை வென்றது.
இந்தியா ஸ்ரீலங்காவை வென்றது
இந்தியா ஆப்கானிஸ்தானை வென்றது
இந்தியா வெஸ்ட் இண்டீசை வென்றது !
இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றது !
இந்தியா தென் ஆப்பிரிக்காவை வென்றது
இந்தியா நியூஸிலாந்து போட்டி மழையினால் ரத்தானது
இந்தியா இங்கிலாந்திடம் தோல்வியுற்றது
அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியுற்று உலகக் கோப்பை ஆட்டத்திலிருந்து வெளியேறியது
உலகக்கோப்பை 2023க்குக் காத்திருப்போம்.