
எங்கே அந்த மின்னலென
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் இடையாக
இருக்கும் தன்மை அறியாயோ?
எங்கே அந்த மேகமென
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே கரிய அருவியென
இறங்கும் கூந்தல் வேறெதுவோ?எங்கே அந்தத் தென்றலென
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் நடையழகில்
இயையும் மென்மை அதுவன்றோ?
எங்கே அந்த நிலவெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே முகமாய் வடிவெடுத்த
எழிலை எதுவென்று எண்ணிவிட்டாய்?எங்கே அந்தத் தேனெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் சொல்லினிலே
இருக்கும் இனிமை வேறென்ன?
எங்கே அந்த வண்டெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்னைச் சுற்றிவரும்
என்றன் உள்ளம் அதுவன்றோ?
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் இடையாக
இருக்கும் தன்மை அறியாயோ?
எங்கே அந்த மேகமென
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே கரிய அருவியென
இறங்கும் கூந்தல் வேறெதுவோ?எங்கே அந்தத் தென்றலென
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் நடையழகில்
இயையும் மென்மை அதுவன்றோ?
எங்கே அந்த நிலவெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே முகமாய் வடிவெடுத்த
எழிலை எதுவென்று எண்ணிவிட்டாய்?எங்கே அந்தத் தேனெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்றன் சொல்லினிலே
இருக்கும் இனிமை வேறென்ன?
எங்கே அந்த வண்டெனவே
என்னை மீண்டும் கேட்காதே!
இங்கே உன்னைச் சுற்றிவரும்
என்றன் உள்ளம் அதுவன்றோ?
Very beautifully said.Thamiz konjuthu with nature.
LikeLike