“முப்பது நாட்களில் நான் எப்படி முன்னேறுவது ? “
என்ற கேள்விக்கு சமூக வலைத்தளத்திலிருந்து கிடைத்த 21 அபூர்வ யோசனைகள் :
நாமும் முயலலாமே!
1 உங்கள் பேச்சில் உள்ள விஷத்தன்மையை எடுத்துவிடுங்கள்! எதிர்மறை வார்த்தைப் பிரயோகத்தைக் குறைத்துவிடுங்கள்! எப்போதும் அமைதியாக இருங்கள்!
2. தினமும் படியுங்கள்! எதுவாக இருந்தாலும் சரி! உங்களுக்குப் பிடித்ததாக அது இருக்கட்டும்!
3. பெற்றோர்களிடம் கோபமாகப் பேசமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள்! எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல.
4, உங்களைச் சுற்றி உள்ளவர்களைக் கூர்ந்து கவனியுங்கள்! அவர்களிடமிருந்து நல்ல எண்ணங்களைக் கிரகித்துக்கொள்ளுங்கள்!
5. தினமும் சிறிதுநேரம் இயற்கையுடன் செலவழியுங்கள்!
6. அனாதையாய்த் திரியும் விலங்குகளுக்கு உணவளியுங்கள்! பசித்தவருக்குப் புசிக்கக்கொடுப்பது மனநிறைவைக் கொடுக்கும்!
7. ‘தான்’ ‘நான்’ ‘எனக்கு’ என்ற எண்ணத்தை உதறுங்கள்! புரிதல்தான் வாழ்க்கை! அதைக் கற்றுக்கொள்ளுங்கள் !
8. சந்தேகத்தை நிவர்த்தி செய்யத் தயங்காதீர்கள் ! ( கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடம் முட்டாளாகிறான். கேட்காதவன் வாழ்நாள் முழுதும் முட்டாளாயிருக்கிறான். )
9. எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டோடு செய்யுங்கள்!அது தியானத்திற்குச் சமானம்.
10. எதிர்மறையான எண்ணங்களை விதைப்பவர்களிடமிருந்து விலகி நில்லுங்கள்! ஆனால் அவர்களை வெறுக்காதீர்கள்!
11. உங்களை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அப்படிச் செய்தீர்கள் என்றால் உங்கள் திறமை உங்கள் கண்களுக்குப் புலப்படாமால் போகும்..
12. முயற்சி செய்யாமல் இருப்பதுதான் வாழ்வின் மிகப்பெரிய தோல்வி.
13. எப்போதும் குறைகூறாதீர்கள். ( காலில் அணிய செருப்பில்லையே என்ற என் புலம்பல் காலே இல்லாதவனைப் பார்த்ததும்தான் நின்றது)
14. ஒவ்வொருநாளும் திட்டமிடுங்கள்! அதில் செலவழியும் மணித்துளிகள் பல நாட்களைக் காப்பாற்றும்.
15. ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் அமைதியாக உங்களுக்காக உங்களுடன் செலவிடுங்கள்! அது புரியும் மாயத்தை உணருங்கள்!
16. நல்ல ஆரோக்கியமான உடம்பில்தான் ஆரோக்கியமான மனமும் குடியிருக்கும். அதைக் குப்பை கூளத்தால் நிரப்பாதீர்கள்.
17. தினமும் 8 -10 குவளை நீர் அருந்துங்கள்!
18. தினமும் ஒரு வேளையாவ்து உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்!
19. உங்கள் உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் . ” உடல் நலம் நம்பிக்கையைக் கொடுக்கும்; நம்பிக்கை மற்ற எல்லாவற்றையும் கொடுக்கும்.
20. வாழ்க்கை என்பது மிகச் சிறியது. மிகச் சாதாரணமானது. அதைக் குழப்பிவிடாதீர்கள். சிரிக்க மறந்துவிடாதீர்கள்.
21. இந்தக் குறிப்பை தினமும் ஒருமுறையாவது படியுங்கள்!
Positive attitude orientation. Very good to say “read daily ” Nice approach
LikeLike