கொடிய பாம்பின்மேல் – கண்ணா
குதித்த கால்களை
மடியில் கிடத்தியே – கண்ணா
வருடிக் கொடுக்கவோ

காற்று மழையுமாய் – கண்ணா
கலங்க வைத்ததே
ஏற்ற குடையென – கண்ணா
எடுத்தாய் மலையினை.
ஆயர் குலத்தினில் – கண்ணா
அன்று பிறந்தனை
வேயின் குழலினால் – கண்ணா
விந்தை புரிந்தனை.
மாய அரக்கர்கள் – கண்ணா
மாயச் செய்தனை
தூய அன்பர்கள்- கண்ணா
சூழ்ந்து வாழ்த்தினர்.
மறைந்து போயினை – கண்ணா
வடிவு கரந்தனை
உறைந்து நிற்கிறோம் – கண்ணா
ஓடி வா இங்கு.
ஏய்க்கப் பார்க்கிறாய் – கண்ணா
எங்கோ செல்கிறாய்
வாய்க்கும் கோபியர் – உள்ளம்
வாட்டிக் கொல்கிறாய்.
காக்க வந்தவன் – கண்ணா
கலங்க வைப்பதா
ஏக்கம் தீர்க்க வா – கண்ணா
இன்பம் சேர்க்க வா.
வெண்ணெய் தயிருமே – கண்ணா
விரும்பி அளிக்கிறோம்
உன்னைத் தந்திடு – கண்ணா
உள்ளம் வந்திடு.
Very nice!!!
LikeLike
Very very nicely said,even children’s can read and love the sentences.very apt for jhanmashtami.
LikeLike